திரிபுராந்தகர்
பாதாமி அருங்காட்சியக சிற்பம் நான் கீழ்கண்ட திரிபுராந்தகரின் சிற்பத்தைப் பார்த்தது கர்நாடக மாநிலம் பாதாமியில் உள்ள அருங்காட்சியகத்தில். 29/10/2019 அன்று. நுழைவாயிலை அடுத்த முன் கூடத்தில் இருந்தது சிற்பம். அருங்காட்சியகத்தில் உள்ள முதன்மையான காட்சிப்பொருட்களில் இதுவும் ஒன்று. இந்த சிற்பம் பட்டடக்கல் விருபாக்ஷர் கோயிலில் இருந்து கிடைத்தது.. 8 ஆம் நூற்றாண்டு, சாளுக்கியர் கலை. திரிபுராந்தகர்: பாதாமி அருங்காட்சியகம். Source: https://www.deccanherald.com/spectrum/spectrum-top-stories/past-preserved-735815.html முப்புரம் சிற்பத்தின் மேல் இடது மூலையில் அம்பு குறிபார்த்து உள்ளது முப்புரம் (வடமொழியில் திரிபுரம்) எனும் மூன்று கோட்டை நகர்கள். ஒன்று பொன்னாலானது, தாரகாக்ஷனுக்குரியது. வெள்ளியாலான இரண்டாவது கமலாக்ஷனுக்குரியது. இரும்பாலான மூன்றாவது வித்யுன்மாலிக்குரியது. இம்மூவரும் முருகனால் கொல்லப்பட்ட தாரகாசுருனுடைய மகன்கள். நான்முகனை நோக்கிக் கடுந்தவம் புரிந்து பெற்ற வரங்களால் மயனை அழைத்து இந்த முப்புரங்களை அமைத்துக்கொண்டனர். வெல்லற்கரிய...