Posts

Showing posts from February, 2024

ஏகவீரி

Image
ஏகவீரி எனும் அஷ்டபுஜக் காளி - திருவலஞ்சுழி கோயில் தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில், சுவாமிமலைக்குப் பிரியும் குறுக்குச் சாலையின் தொடக்கத்திலேயே அமைந்துள்ளது திருவலஞ்சுழி சடைநாதர் திருக்கோயில். மனம் மயக்கும் புன்னகையுடன் உள்ள இந்த அம்மன் இந்தக் கோவிலில் அம்பாள் சந்நிதிக்கு வடக்கு பகுதியில் உள்ளார். சோழப்பேரரசர்கள் ராஜராஜ சோழனும், அவன் மகன் ராஜேந்திர சோழனும், இந்த மாகாளியின் சந்நிதியில் தங்களின் வாள், வேல் போன்ற ஆயுதங்களை வைத்து வழிபட்டு, இவளிடம் உத்தரவுபெற்ற பிறகே போருக்குப் புறப்படு வார்கள், அவளின் திருவருளால் வெற்றிமேல் வெற்றியைக் குவித்தார்கள் என்றும் வரலாறு கூறுகின்றது. 'ஏகவீரி' என்றும் 'பிடாரி ஏகவீரி' என்றும் அழைக்கப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கிறது. இன்றைக்கு அஷ்டபுஜ காளி என்ற பெயர் மாற்றம் பெற்று கோயிலின் ஒரு மூலையில் தங்கிவிட்டாள். ராஜராஜனின் மாமியாரான குந்தணன் அமுதவல்லியார், பிடாரி ஏகவீரிக்கு ‘அவபல அஞ்சனை’ செய்வதற்காக நிவந்தங்கள் வழங்கினார் என்ற தகவலைச் சொல்கிறது ஒரு கல்வெட்டு.  இந்த பெண்மணி தெலுங்கு தேசத்தை சேர்ந்தவர். "அவபல அஞ்சனை" என்ற பூஜை குறித்த ச...