Posts

Showing posts from September, 2025

ராஜேந்திர சோழன் வென்ற இடங்களில் இருந்து கொண்டு வந்த சிற்பங்கள்

Image
ராஜேந்திர சோழன் வென்ற இடங்களில் இருந்து கொண்டு வந்த சிற்பங்களும் அவை தற்போது இருக்கும் இடங்களும்: 1. கல்யாணி சாளுக்கியர்கள் தலைநகரம் கல்யாணியிலிருந்து ஒரு துவார பாலகர் சிலை முதலில் பழையாறையில், பின்னர் தாராசுரம் கோயிலில், இப்போது தஞ்சாவூர் கலைக்கூடத்தில் உள்ளது. அடியில் கல்வெட்டுப் பொறிப்பு - "ஸ்வஸ்திஸ்ரீ உடையார் ஸ்ரீ விஜயராஜேந்திர தேவர் கல்யாணபுரம் எறிந்து கொடுவந்த துவாரபாலகர்" வலது கால் அருகில் ஒரு பூனை ஒரு எலியை முன் கால்களால் பற்றியுள்ளது. இடது காலுக்குக் கீழ் ஒரு பாம்பு எலியைக் கவ்வியுள்ளது. இடது காலுக்குக் கீழ் ஒரு எலியும் பக்கத்தில் ஒரு எலியும் மேலே ஏறுகின்றன. திருவாசியின் இடது பக்கம் ஒரு உடும்பு (PC: கவின்மிகு சோழர் கலைகள், Dr R Nagaswamy pa62) 2. கங்கைகொண்ட கணபதி பாலர்களை வென்று வங்கதேசத்தில் இருந்து கொணர்ந்தது. இப்போது குடந்தை கீழ் கோட்டத்தில் உள்ளது. (PC: கவின்மிகு சோழர் கலைகள், Dr R Nagaswamy p60) அதை மாதிரியாக கொண்டு அமைத்த செப்புத்திருமேனி தஞ்சாவூர் கலைக்கூடத்தில் உள்ளது. 3.பாலர் ஆடல் வல்லான் மேலக் கடம்பூர் (Kadamburvijay, CC BY-SA 3.0 <https://creativecommon...

கருடன்

Image
இந்த சிற்பம், திருக்குறுங்குடி (நாங்குநேரி, நெல்லை) கோவில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ளது. இதில் கருடன், ஒரு கையில் ஒரு ஆமையையும், மற்றொரு கையில் ஒரு யானையையும் பிடித்துக்கொண்டு இருக்கிறார். அலகில் கவ்வியுள்ள மரக்கிளையில் சில ரிஷிகள் தலைகீழாக தொங்கியபடி தவம் செய்கிறார்கள். இதன் பின்னுள்ள தொன்மம்: அமிர்த கலசத்தைத் தேடிப்போகும் கருடன் தன் தந்தை கஷ்யபரைச் சந்தித்தான். தனக்குப் பணிகள் நிறைய இருப்பதால், சத்தான உணவு வேண்டும் என்று தந்தையிடம் கேட்டான். கஷ்யபர் அருகில் உள்ள ஏரியைக் காண்பித்து, அங்கு ஒரு யானையும் ஆமையும் ஒன்றோடு ஒன்று சண்டை போடுவதாகவும், அந்த இரண்டையும் பிடித்துத் தின்றுகொள்ளலாம் என்று காட்டினார். விபாவசு, சுப்ரீதிகா என்ற இருவர் உடன்பிறந்தோர். இருவரும்  சொத்துப் பிரிவினைக்காக சண்டை போட்டுக் கொண்டனர். விபாவசு தன் தம்பியை யானையாகப் பிறக்குமாறு சபித்தான். சுப்ரீதிகா தன் அண்ணனை ஆமையாகப் பிறக்குமாறு சபித்தான். யானையாகவும், ஆமையாகவும் ஆன பின்னும் இருவரும் கஷ்யபர் காட்டிய ஏரியில் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அந்த இருவரையும் தின்றபின் அமிர்த கலசத்தை எடுக்கச் செல் என்று சொன்...

திருமாலின் 24 வடிவங்கள்

Image
மகாபாரதத்தின் அனுசாசனப் பர்வத்தில் உள்ள விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் திருமாலின் 1000 பெயர்கள் உள்ளன. அவற்றுள் 24 பெயர்கள் மிக முக்கியமானவை ஆகவும் தினசரி வழிபாட்டில் இடம்பெறக் கூடியவை ஆகவும் கருதப்படுகின்றன.  இந்த 24 பெயர்களுக்கான திருமாலின் 24 உருவங்கள் வரையறுக்கப் பட்டுள்ளன. திருமாலின் 4 கைகளில் ஆழி (C), சங்கு, கதை, தாமரை ஆகியவை அமையும் விதம் இந்த பெயர்களை நிர்ணயிக்கின்றன. மற்றபடி திருமாலின் வடிவில் இந்த 24 வடிவங்களுக்குள் வேறுபாடு இல்லை. 24 (சதுர் விம்ஷதி) திருமால் உருவங்கள் (ரூபமண்டனம் நூலின் படி) BR வலது பின் கை C சக்கரம் BL இடது பின் கை S சங்கு FL இடது முன் கை G கதை FR வலது முன் கை P தாமரை வஎ ரூபமண்டன வரிசை எண் BR BL FL FR வஎ C S G P ஜனார்தனன் 21 P G மாதவன் 3 G S P ஸ்ரீதரர் 9 P S வாமனர் 8 P S G ஹ்ருஷிகேசன் 10 G S ஹரி 23 S C G P கேசவன் 1 P G வாசுதேவன் 14 G C P தாமோதரன் 12 P C ப்ரத்யும்னன் 15 P C G சங்கர்ஷ்ணன் 13 G C மதுசூதனன் 6 G C S P த்ரிவிக்ரமன் 7 P S உபேந்திரன் 22 S C P அதோக்ஷஜன் 18 P C அனிருத்தன் 16 P S C கோவிந்தன் 4 C S ஸ்ரீ கிருஷ்ணன் 24 P C G S பத்மநாபன் 11 S G அச்சுதன் 20 S C ...