Posts

Showing posts from July, 2022

வீரபத்திரர்

Image
சிவன் புரிந்த எட்டு வீரத் திருவிளையாடல்களில் ஒன்று தக்கன் யாகத்தை அழித்து அவன் தலையைத் துண்டித்தது. அதை அவர் நேரடியாகச் செய்யவில்லை. அதற்காக அவர் தன்னிலிருந்து உருவாக்கிய வீர அம்சமே வீரபத்திரர். இந்த நிகழ்வு குறித்த புராணக் கதை இறுதியில் விவரிக்கப்பட்டுள்ளது. சிற்ப இலக்கணம் ஸ்ரீதத்வநிதி, காரணாகமம் ஆகிய நூல்கள் வீரபத்ரரின் சிற்ப இலக்கணத்தைக் கூறுகின்றன. (1) கோபம் பொங்கும் பயங்கரமான முகம், மூன்று கண்கள், கோரைப் பற்கள் ஜுவாலாமகுடம் (*) 4 கைகள் - வலது கைகளில் வாளும், அம்பும்; இடது கைகளில் வில்லும், கதையும் மண்டையோட்டு மாலை மணிகளால் ஆன மாலை, தேள்களால் ஆன மாலை (*) நாகப் பூநூல் (*) அழகிய வீரக்கழல்கள் (*) குட்டை இடையாடை (*) கால்களுக்கு செருப்பு (#) பக்கத்தில் பத்ரகாளி(#) வலது பக்கத்தில் ஆட்டுத் தலை, அஞ்சலி முத்திரையுடன் தக்கன்(#) [ (#) - ஸ்ரீதத்வநிதியில் மட்டும் உள்ளது. (*) - காரணாகமத்தில் மட்டும் உள்ளது) ‘சில்ப ரத்தினம்’ என்ற நூல் வீரபத்திரரின் படிமம் எட்டுக் கைகளுடன் அமைக்கப்பட்டு, கணங்களால் சூழப்பட்டு, வேதாளத்தின் மீது அமர்ந்த நிலையில் அமைக்கப்பட வேண்டும் என்று விளக்கியுள்ளது. ‘சில்ப சங்கீர...

ஜுரஹரேஸ்வரர்

Image
ஜுரஹரேஸ்வரர், ஜ்வரபக்ன மூர்த்தி எனப்படும் சுரம் நீக்கும் பரமன் 64 சிவ மூர்த்தங்களுள் ஒன்று. அரிதாகவே காணப்படும் இந்த மூர்த்தம், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளைகாப்பு மண்டபத்தின் நடுவே உள்ள மேடையின் நான்கு தூண்களில் வடகிழக்குத் தூணிண் அடிப்பகுதியில் வடக்கு (1000 கால் மண்டபத்தை) நோக்கியுள்ளது.  சுரம் நீக்கும் பரமன் (ஜ்வரபக்ன மூர்த்தி): வளைகாப்பு மண்டபம் தூக்கிய இடது திருவடி, வீசிய முன் இடது கை, தழல் ஏந்திய இடது பின்கை இவற்றால் முதலில் நடராஜர் திருவடிவம் போலத் தோன்றினாலும் இந்த திருவடிவம் 3 முகங்களும், 3 கைகளும் 3 கால்களும் உடையது.  ஜ்வரபக்ன மூர்த்தியை வழிபட்டால் சுரம் தீரும் என்று நம்பப்படுகிறது.  புராணம் இத்திருவடிவத்தின் பின் உள்ள புராணக்கதை என்ன? மகாபாரத காலத்தில் வாழ்ந்தவன் ஆயிரம் கைகளுடைய வாணாசுரன். திருமாலின் ஐந்தாம் அவதாரமாகிய வாமனருக்கு மூன்று அடி மண் கொடுத்த மகாபலியின் மகன். சிறந்த சிவபக்தனான இவனது வேண்டுதலுக்கு சிவன் இணங்கி , பார்வதி, கணேசர், முருகரோடு அவன் அரண்மனையில் தங்கி இருந்தார். தன் மகள் உஷை கண்ணனின் மகன் அநிருத்தனை காதலிப்பது அ...