Posts

வில்லேந்திய வேலவர்

Image
(படம் நன்றி: அர்ஜுன வல்லபா) பூம்புகார் அருகில் உள்ள பாடல் பெற்ற தலமான சாயாவனம் சாயவனேசுவரர் கோயிலில் முருகர் கையில் வில் மற்றும் அம்பு ஏந்திய கோலத்தில் நான்கு கைகளுடன் செப்புப் படிமமாக காட்சி தருகிறார். ஆகமங்களின்படி முருகர் ஆறுமுகராக பன்னிரண்டு கைகளோடு விளங்கும்போதும் எட்டு கைகளை கொண்டிருக்கும் போதும் இடக்கை ஒன்றில் வில்லும் வலக்கை ஒன்றில் அம்பும் இருக்கலாம். ஆனால் இரண்டு, நான்கு, ஆறு கைகள் உடைய முருகர் படிமங்களில் வில்லையும் அம்பையும் ஆகமங்கள் பரிந்துரைப்பதில்லை. இங்கு நான்கு கை முருகர் வில் அம்பை ஏந்தி இருப்பது சிறப்பு. இவர் திருச்செந்தூர் கோயிலைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது. 1648-ஆம் ஆண்டில், டச்சுக்காரர்கள் இந்தச் சிலையைத் திருட்டுத்தனமாகக் கப்பலில் கொண்டு சென்றனர். அவர்களது கப்பல் கடலின் நடுவில் சிக்கிக்கொண்டதால், அவர்கள் பூம்புகார் அருகே முருகன் சிலையைக் கடலில் தவறவிட்டனர். பின் இந்த முருகர் சிலை பூம்புகார் கடற்கரையில் ஒரு மீனவரின் வலையில் சிக்கியது. கடலில் இருந்து கிடைத்ததால் இவரை "கடல் கொடுத்த சுடர்" என்றும் அழைக்கிறார்கள். சிலையின் அடியில் "செந்தில் ஆண்டவர...

முருகன் ஊர்தியான மயிலின் வகைகள்

Image
சிற்பங்களில் முருகருக்கு வாகனமாக விளங்கும் மயில்கள் மூவகை:   மந்திர மயில் (பிரணவ மயில்) முருகர் மாங்கனி வேண்டி,  உலகைச் சுற்றி வந்தபோது, அவருக்கு வாகனமாக இருந்தது மந்திர மயில். இது ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவம்.  அருணகிரிநாதர்,  "ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்டது ஆடுமயில் என்பது அறியேனே" என்று போற்றுகிறார். பொருள்: 'ஒப்பற்ற ஓங்கார மந்திர வடிவ நிலை கொண்டது ஆடும் மயில்தான் என்று அறியவில்லையே'. தகராலய ரகசியம் - (தகரம் - சிறிய ஆகாயம், அதாவது இதயம்). தியானத்தில் பிரணவ சொரூபமான மயில் மீது முருகனை பாலகனாக தரிசித்தல் . பாம்பன் சுவாமிகளுக்கு இந்தக் கோலத்தில் அவன் காட்சியளித்தான். இது `குக ரகசியம் என்றும் அழைக்கப்படுகிறது,  தேவ மயில் (இந்திர மயில்) சூரபத்மனுடன் போரிடும்போது, சூரன் அவருடைய ஆற்றலுக்கு எதிர்த்து நிற்க முடியாமல் சக்ரவாகப் பட்சியாக உருவமெடுத்து ஓடினான். அவனைத் தொடர்ந்து செல்ல இந்திரன் மயிலாக உருமாறி முருகரைத் தாங்கிச் சென்றான். இது தேவ மயில். அசுர மயில் சூரபத்மனுடனான போரின் இறுதியில், முருகர் மருத மரமாக நின்ற அவனை வேலால் இரண்டாகப் பிளந்தார். அது, மய...

ஏகபாத மூர்த்தி

Image
சிவனின் 64 வடிவங்களில் 52 வது வடிவம் ஏகபாத மூர்த்தி. அவற்றுள்ளும் சிறப்பான 25 மகேசுவர வடிவங்களுள் ஒன்று. ஐந்து முக மகேசுவர மூர்த்தியின்  வடக்கு முகமான வாமதேவ முகத்தில் இருந்து தோன்றிய வடிவம். பேரூழிக் காலத்தில் முழுப் பிரபஞ்சமும் அனைத்து கடவுளரும் உயிர்களும் ஏகபாத மூர்த்தியின் ஒற்றைக் காலில் ஒடுங்குவர். காலத்தால் மூத்த ஏகபாதரின் சிற்பம் ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டம் ரங்க மஹலில் கிடைத்த சுடுமண் சிற்பம் ஆகும். இது தற்போது பீகானேர் கங்கா சிங் அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது. அஜ ஏகபாதர் -  பீகானேர் அருங்காட்சியகம், 33 x 20.5 cm 1918 இல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சுடுமண் சிற்பம் பொ ஆ 4 ஆம் நூற்றாண்டு குப்தர் காலத்தது. 1960 இல் தான் அஜ ஏகபாதர் என்று வி எஸ் அக்ரவாலா அவர்களால் அடையாளம் காணப்பட்டது. இரு கொம்புகளுடன் ஆன ஆட்டின் தலை, மனித உடல், இரு கைகள், ஒற்றை யானைக் கால் ஆகியவை கொண்டுள்ளது. (படம் நன்றி:  American Institute of Indian Studies, Center for Art and Archaeology, Gurugram, Haryana; Public Domain) அஜ ஏகபாதர் என்ற தெய்வமாக ரிக் வேதத்தில் ஏகபாதர் அறிமுகம் ஆகிறார். ...

அனுமன்

Image
அனுமனும் காசிலிங்கமும் ராவணனைக் கொன்ற அந்தணக்கொலைப் பழி நீங்க ராமேஸ்வரத்தில் ஒரு லிங்கத்தை நிறுவி வழிபட வேண்டும் என்று ராமனுக்கு முனிவர்கள் அறிவுரை வழங்கினர். ராமன் காசியில் இருந்து ஒரு லிங்கத்தைக் கொண்டு வருமாறு அனுமனை அனுப்பிவைத்தார். ஆனால் உரிய நேரத்தில் அனுமன் வராததால் சீதை மணலால் செய்த லிங்கத்தை நிறுவினார் ராமன். காசியில் இருந்து லிங்கத்தோடு வந்த அனுமன் அந்த மணல் லிங்கத்தை அகற்றி காசி லிங்கத்தை நிறுவ முயற்சித்து தோல்வியுற்றான். ராமேஸ்வரம் கோயில் வாயிலிலுள்ள சிவந்த நிற அனுமனின் உருவம் இந்நிகழ்வை நினைவு கூறுகிறது. அனுமனை அமைதிப்படுத்த ராமன் சீதை அமைத்த லிங்கத்திற்கு வடக்காக அனுமன் கொண்டுவந்த லிங்கத்தை நிறுவினார். அதுவே அனுமலிங்கம் அல்லது காசிலிங்கம் என்ற பெயருடன் விளங்குகின்றது. முதலில் இந்த விசுவநாதருக்கு வழிபாடு நடத்தப்பட்டபின்பே, சீதையால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்கு நடைபெறும் என்று ராமர் அறிவித்தார். https://groups.google.com/g/brailleacl/c/jUb7a0twU-A

ராஜேந்திர சோழன் வென்ற இடங்களில் இருந்து கொண்டு வந்த சிற்பங்கள்

Image
ராஜேந்திர சோழன் வென்ற இடங்களில் இருந்து கொண்டு வந்த சிற்பங்களும் அவை தற்போது இருக்கும் இடங்களும்: 1. கல்யாணி சாளுக்கியர்கள் தலைநகரம் கல்யாணியிலிருந்து ஒரு துவார பாலகர் சிலை முதலில் பழையாறையில், பின்னர் தாராசுரம் கோயிலில், இப்போது தஞ்சாவூர் கலைக்கூடத்தில் உள்ளது. அடியில் கல்வெட்டுப் பொறிப்பு - "ஸ்வஸ்திஸ்ரீ உடையார் ஸ்ரீ விஜயராஜேந்திர தேவர் கல்யாணபுரம் எறிந்து கொடுவந்த துவாரபாலகர்" வலது கால் அருகில் ஒரு பூனை ஒரு எலியை முன் கால்களால் பற்றியுள்ளது. இடது காலுக்குக் கீழ் ஒரு பாம்பு எலியைக் கவ்வியுள்ளது. இடது காலுக்குக் கீழ் ஒரு எலியும் பக்கத்தில் ஒரு எலியும் மேலே ஏறுகின்றன. திருவாசியின் இடது பக்கம் ஒரு உடும்பு (PC: கவின்மிகு சோழர் கலைகள், Dr R Nagaswamy pa62) 2. கங்கைகொண்ட கணபதி பாலர்களை வென்று வங்கதேசத்தில் இருந்து கொணர்ந்தது. இப்போது குடந்தை கீழ் கோட்டத்தில் உள்ளது. (PC: கவின்மிகு சோழர் கலைகள், Dr R Nagaswamy p60) அதை மாதிரியாக கொண்டு அமைத்த செப்புத்திருமேனி தஞ்சாவூர் கலைக்கூடத்தில் உள்ளது. 3.பாலர் ஆடல் வல்லான் மேலக் கடம்பூர் (Kadamburvijay, CC BY-SA 3.0 <https://creativecommon...