ராஜேந்திர சோழன் வென்ற இடங்களில் இருந்து கொண்டு வந்த சிற்பங்கள்

ராஜேந்திர சோழன் வென்ற இடங்களில் இருந்து கொண்டு வந்த சிற்பங்களும் அவை தற்போது இருக்கும் இடங்களும்:

1. கல்யாணி சாளுக்கியர்கள் தலைநகரம் கல்யாணியிலிருந்து ஒரு துவார பாலகர் சிலை முதலில் பழையாறையில், பின்னர் தாராசுரம் கோயிலில், இப்போது தஞ்சாவூர் கலைக்கூடத்தில் உள்ளது. அடியில் கல்வெட்டுப் பொறிப்பு - "ஸ்வஸ்திஸ்ரீ உடையார் ஸ்ரீ விஜயராஜேந்திர தேவர் கல்யாணபுரம் எறிந்து கொடுவந்த துவாரபாலகர்"

வலது கால் அருகில் ஒரு பூனை ஒரு எலியை முன் கால்களால் பற்றியுள்ளது. இடது காலுக்குக் கீழ் ஒரு பாம்பு எலியைக் கவ்வியுள்ளது. இடது காலுக்குக் கீழ் ஒரு எலியும் பக்கத்தில் ஒரு எலியும் மேலே ஏறுகின்றன. திருவாசியின் இடது பக்கம் ஒரு உடும்பு
(PC: கவின்மிகு சோழர் கலைகள், Dr R Nagaswamy pa62)

2. கங்கைகொண்ட கணபதி பாலர்களை வென்று வங்கதேசத்தில் இருந்து கொணர்ந்தது. இப்போது குடந்தை கீழ் கோட்டத்தில் உள்ளது.

(PC: கவின்மிகு சோழர் கலைகள், Dr R Nagaswamy p60)

அதை மாதிரியாக கொண்டு அமைத்த செப்புத்திருமேனி தஞ்சாவூர் கலைக்கூடத்தில் உள்ளது.




3.பாலர் ஆடல் வல்லான் மேலக் கடம்பூர்

(Kadamburvijay, CC BY-SA 3.0 <https://creativecommons.org/licenses/by-sa/3.0>, via Wikimedia Commons)

செவ்வக பீடத்தின் நடுவில் உள்ள தாமரை பீடத்தின் மேல் நிற்கும் காளையின் மேல் சதுர தாண்டவம் ஆடும் சிவன்.  வீசிய பத்து கரங்களில் வலது கீழ்க் கையில் இருந்து துதிக்கை, வேல், தண்டம், சூலம், வாள் - அலபத்மம், கேடயம், கட்வாங்கம், மண்டையோடு, பாம்பு. அவர்காலடியில் திருமால் மத்தளமிசைக்க, வீரபத்திரர் சூலமாட, பைரவர், கணங்கள், விநாயகர், பார்வதி, பிருங்கி, காரைக்கால் அம்மையார், மகாகாளர், நந்தி, நாட்டிய பெண்கள் சேர்ந்தாட, முருகன் மயில் மேல் பறக்க, கந்தர்வர்கள் மலரிட, திருவாசியில் தீக்குப் பதிலாக அரச இலைகள். தலைக்குப் ஒளிவட்டமும் மணிமுடியும் வங்க தேச பாணி. இச்சிற்பம் போன்ற கல்லாலான மூன்று புடைப்பு சிற்பங்கள் வங்கதேசம் டாக்கா தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளன. (விக்கிபீடியா)

4. படுத்திருக்கும் இடத்தின் முதுகு மேல் அமைந்திருக்கும் அம்பாரி மேல் உமையுடன் அமர்ந்திருக்கும் சிவன் சிற்பம். திருலோக்கி.




5. பாலர் கார்த்திகேயன் தெய்வயானை சிற்பம் திருலோக்கி


6. சாளுக்கிய எட்டுக்கை கொற்றவை சிற்பம் சொக்கப்பள்ளம் வீர ரெட்டி தெரு கோயில்

(PC: கவின்மிகு சோழர் கலைகள், Dr R Nagaswamy p61)

7. மண்மலை மகிடற்செற்றாள் - மத்திய பிரதேச குப்தர் கலைப் பாணியை தழுவியது. மகேந்திர கிரி குடைவரைச் சிற்பத்தை ஒத்தது. 

செங்கமேட்டு கலிங்க சிற்பங்கள்

இவ்வூரில் தரையில் புதைந்திருந்த ஆறு சிற்பங்களை தமிழக தொல்லியல் துறை கட்டடம் கட்டி வைத்துள்ளது.  அவற்றில் நான்கு ராஜேந்திர சோழன் வடநாட்டில் இருந்து கொண்டு வந்தவை. மற்ற இரு காளி சிற்பங்கள் தமிழகத்தைச் சார்ந்தவை.

8. பைரவர் உடைந்த நிலையில்

  
9. முழுமையான பைரவர்


(PC: கவின்மிகு சோழர் கலைகள், Dr R Nagaswamy p68)

10, 11. இரண்டு பைரவி சிற்பங்கள்




12. சலுப்பை அய்யனார் கோயில் முன் மண்டபத்தில் வடபுலத்து கொற்றவை

(PC: Late Durai Sundaram via Veludharan Temples visit) 

13. சாளுக்கிய கணக்கு பிள்ளையார். 

கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயிலுக்கு தென்மேற்குத் திசையில் உள்ள சிறு கோயிலில் உள்ளார்.

பின் கரங்களில் மழு அக்கமாலை, முன் கரங்களில் உடைந்த தந்தம் பழம் ஒன்று.

14. அட்ட மாதர் தொகுப்பு - முன்னர் தென் கைலாய திருச்சுற்றில் இடம் பெற்றிருந்து இப்போது திருமானூர் சாலையில் உள்ள மாரியம்மன் கோயிலில் உள்ளது.

15. கொள்ளம் புதூர் கங்கநாட்டு கலைப்பாணி துர்க்கை

16. திருவாரூர் கோயில் பிள்ளையார் 

17. திருவாரூர் கோயில் மகிஷாசுரமர்த்தினி  

18. திருஞ்வாசியம் வாஞ்சிநாதர் கோயில் மகிஷாசுரமர்த்தினி.

19திருஞ்வாசியம் வாஞ்சிநாதர் கோயில் அமர்ந்த கால பைரவர்.

20. திருவதிகை கோயில் நுளம்பர் மகிஷாசுரமர்த்தினி

21. ஜம்பை ஜம்பு நாதர் கோயில் சாளுக்கிய நாட்டு மகிஷாசுரமர்த்தினி


கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் வெளிநாட்டு சிற்பங்கள்

22. நுளம்பர் சூரிய பீடம்.
பீடத்தின் நடுவே மலர்ந்த தாமரை. அதன் எட்டு திசைகளிலும் அமர்ந்த நிலையில் எண்மர். எண் திசைக் காவலர்கள். தலைக்கு பின் ஒளிவட்டம். வலக்கையில் தாமரை. இடக்கையில் நீர் சொம்பு. சூரிய தேரின் இரு பக்கங்களிலும் இருசக்கரங்கள். ஏழு குதிரைகள். நடுவே மேலாக அருணன். இரு பக்கமும் இருவர் உருவங்கள். பீடத்தின் நான்கு மூலைகளிலும் கந்தர்வர்கள்.

(PC: கவின்மிகு சோழர் கலைகள், Dr R Nagaswamy p67)

சாளுக்கிய மகிடற்செற்றாள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் ஒரு சிற்றாலயத்தில் வழிபாட்டில் உள்ளது.

(PC: கவின்மிகு சோழர் கலைகள், Dr R Nagaswamy p63)

23. நுளம்பர் நாட்டு கொற்றவை

பத்தாம் நூற்றாண்டு. கற்பலகை புடைப்புச் சிற்பம். சிம்மத்தின் முன் மனித உடலும் எருமைத் தலையும் கொண்ட மகிடன் விழுந்து கிடக்கிறான் மகுடனின் முதுகின் மீது கொற்றவையின் வலது கால். இடது காலை தரையில் ஊன்றி உள்ளாள். எட்டு கைகள். சக்கரம் சங்கு, வாள் கேடயம், அம்பு வில், திரிசூலம் பாசம். திரிசூலத்தின் அடிப்பகுதி மகிடனின் தலையைக் கீழ்நோக்கி அழுத்துகிறது. சடை மகுடம், மகரக் குழைகள், பிற அணிகலன்கள்.

(PC: கவின்மிகு சோழர் கலைகள், Dr R Nagaswamy p66)

24, சாளுக்கிய நாட்டுச் சூரியன் சிற்பம் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு‌.

25. வடபுலத்துக் கலைமகள்
பின் கரங்களில் அங்குசம் பாசம், முன் கரங்களில் அக்கமாலை சுவடி.



26. கீழை சாளுக்கிய இடபம்
இதன் சிறப்புக் கூறு மணிகள் கோர்க்கப்பட்ட மாலை திமிலுக்குப் பின்புறமாக நடு முதுகு வரை மீண்டுள்ளது. கழுத்தில் மற்றொரு சிறிய மணிமாலை. ஆந்திர மாநில சாமல்கோட் பீமேஸ்வரர் கோயிலில் காணப்படும் காளை வடிவமும் இதுவும் ஒத்துள்ளது.


27. திருவையாறு ஐயாரப்பன் கோயிலில் ராஜேந்திர சோழன் மனைவி பஞ்சவன்மாதேவி எழுப்பிய தென் கைலாயத்தின் திருச்சுற்று மாளிகையில் நுளம்பர்களை வெற்றி கொண்டு கொணர்ந்த 45 தூண்கள் உள்ளன.


(PC:  Madhu Jagdhish via Tumbler)





Comments

Popular posts from this blog

ஏகபாத மூர்த்தி

திருமாலின் 24 வடிவங்கள்

முருகன் ஊர்தியான மயிலின் வகைகள்