தவ்வை (ஜேஷ்டா தேவி): 2. சிற்பங்களும் வழிபாடும்
சைவாகமங்களில் ஜேஷ்டா தேவி திரிலோசன சிவாசாரியார் பொ.ஆ. 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்டாருக்கு 200 ஆண்டுகள் முன் வாழ்ந்தவர். இவர் இயற்றிய சித்தாந்த சாராவளி என்னும் நூல் கூறுவது: வாமா பராசக்தியின் ஒரு வடிவம். வாமா படைத்தல், காத்தல் அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழில்களின் தலைவி. நிலம், படைத்தலின் குறியீடாக தனே இருந்து எட்டு தத்துவங்களின் குறியீடாக எட்டு வடிவங்களை எடுத்தாள். . ஒவ்வொரு வடிவத்திற்கும் இணையாக சிவனின் ஒரு வடிவம் மூர்த்தீஸ்வரனாக அமைகிறது. வாமாவின் எட்டு வடிவங்களுள் நீருக்கான வடிவம் ஜேஷ்டா. எண்மருள் மூத்தவள். அதனால் ஜேஷ்டா எனப் பெயர். காத்தல் தொழிலின் இறைவி. பயங்கரமானவள். வலிமை மிகுந்தவள். செந்நிறம் உடையவள். இரு கைகள் கொண்டவள். ஒன்றில் கபாலமும் மற்றதில் அம்பும்ஏந்துபவள். தன் அடியவர்களுக்கு வளத்தை வழங்கி அவர்களது எதிரிகளை அழிப்பவள். (T. A. Gopinatha Rao; Elements of Hindu iconography part II p362-, 398) தத்துவம் தொழில் வடிவம் ஈஸ்வரன் நிலம் படைத்தல் வாமா வாமதேவர் 1 நீர் காத்தல் ஜேஷ்டா ஜேஷ்ட 2 நெருப்பு அழித்தல் ரௌத்ரி பசுபதி 3 காற்று மறைத்தல...