தவ்வை (ஜேஷ்டா தேவி): 2. சிற்பங்களும் வழிபாடும்
சைவாகமங்களில் ஜேஷ்டா தேவி
திரிலோசன சிவாசாரியார் பொ.ஆ. 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்டாருக்கு 200 ஆண்டுகள் முன் வாழ்ந்தவர். இவர் இயற்றிய சித்தாந்த சாராவளி என்னும் நூல் கூறுவது:
வாமா பராசக்தியின் ஒரு வடிவம். வாமா படைத்தல், காத்தல் அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழில்களின் தலைவி. நிலம், படைத்தலின் குறியீடாக தனே இருந்து எட்டு தத்துவங்களின் குறியீடாக எட்டு வடிவங்களை எடுத்தாள். . ஒவ்வொரு வடிவத்திற்கும் இணையாக சிவனின் ஒரு வடிவம் மூர்த்தீஸ்வரனாக அமைகிறது.
வாமாவின் எட்டு வடிவங்களுள் நீருக்கான வடிவம் ஜேஷ்டா. எண்மருள் மூத்தவள். அதனால் ஜேஷ்டா எனப் பெயர். காத்தல் தொழிலின் இறைவி. பயங்கரமானவள். வலிமை மிகுந்தவள். செந்நிறம் உடையவள். இரு கைகள் கொண்டவள். ஒன்றில் கபாலமும் மற்றதில் அம்பும்ஏந்துபவள். தன் அடியவர்களுக்கு வளத்தை வழங்கி அவர்களது எதிரிகளை அழிப்பவள்.
(T. A. Gopinatha Rao; Elements of Hindu iconography part II p362-, 398)
மேற்கண்ட ஜேஷ்டா உள்ளிட்ட ஒன்பது சக்தி வடிவங்கள், இணையான ஒன்பது சிவ வடிவங்கள் பற்றிய குறிப்பு ஆதி சங்கரரின் சவுந்தர்ய லஹரியிலும் உள்ளது.
சாக்ததில் ஜேஷ்டா
சாக்த வழிபாட்டில் சக்தி பீடத்தின் வடிவான மேரு மலை பூசையில் நவாபரணம் என்னும் ஒன்பது படிகளை அமைக்கின்றனர். அதில் இரண்டாவது ஆபரணம் தவ்வை . (தமிழ் விக்கிபீடியா)
வழிபாடு
சாக்தத்தில் நீரின் குறியீடாக உள்ள ஜேஷ்டையின் சிற்பங்கள் நீர்நிலைகளுக்கு அருகிலும் விளைநிலங்களிலும் காணப்படுகின்றன. கழிவுகளின் தெய்வம் என்ற அடிப்படையில் அவளை உரத்தின் குறியீடாக காண்போரும் உண்டு.
அதையும் தாண்டி தானே வளங்கள் வழங்கும் மங்கலை ஆகவும், சீர்கேட்டில் வாழும் அமங்கலை ஆகவும் எதிர் துருவங்களில் நிலை கொண்ட விசித்திரமான இறைவி அவள்.
தவ்வை என்னும் ஜேஷ்டா தேவி பல பரிணாமங்கள் கொண்ட அன்னை தெய்வம்.
பழங்குடி தெய்வங்களை அழிக்காமல் தன்னுள் புராணக் கதைகள் மூலம் சேர்த்துக் கொண்ட இந்து மதத்தில் அவ்வாறு இணைந்த ஒரு தாய்த் தெய்வம் தவ்வை.
ஜேஷ்டா இந்திய சந்திரமான நாட்காட்டி மற்றும் தேசிய நாட்காட்டி எண் இரண்டாவது மாதம்.
அந்த மாதத்தில் ஒரு புதிதாய் மணமான பெண் கணவன் வீட்டில் தங்கினால் அவளது மூத்த கணவனின் மூத்த சகோதரனுக்கு ஆபத்து ஏற்படும் என்று நம்பிக்கை
ஜேஷ்டா தேவி வழிபாடு பற்றி பௌத்தாயன கிரக சொத்திரத்தில் ஒரு அத்தியாயம் உள்ளது கிமு 600 டு 300.
ஏழு எட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் தவறி வழிபாடு பிரபலமாய் இருந்தது ஒன்பதாம் நூற்றாண்டில் தொண்டர் அடிப்படையில் ஆழ்வார் பாட்டு சக்தி வழிபாடு வளர ஆரம்பித்த பிறகு தொவை வழிபாடு குறைந்தது
உத்திரமேரூர் கொலம்பேஸ்வரா கோயில் தவ்வை சிலை தலைகீழாக கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளது
மனிதர்களிடம் மாயையை உருவாக்க திருமால் விஷ்ணு பிரபஞ்சத்தை இரண்டாகப் படைத்தார் ஒன்றில் பிராமணர்கள் வேதங்கள் வேதங்களில் கூறியுள்ள என்றைக்குமான நியதிகள் மற்றும் லட்சுமி மற்றதில் வேதங்களைப் பின்பற்றாதோர் அதர்மிகள் தர்மங்களை பின்பற்றாதோர் அனைத்து கெட்ட செயல்கள் பாவங்கள் மற்றும் ஜேஷ்டா தேவி என்னும் அலட்சுமி

Comments
Post a Comment