ராமர் ஏழு மரா மரங்களைத் துளைத்தது
இலக்குவனும், சுக்கிரீவனும் பார்த்திருக்க ராமன் ஏழு மரா மரங்களை ஒற்றை அம்பால் துளைத்தல். சின்னையன் குளம், சின்னியம்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் கம்ப ராமாயணத்தின் அடிப்படையில் இந்த காட்சியை சிறப்பாக விளக்குகிறது இந்தக் கட்டுரை: மராமரப் படலம்; திரு சு சண்முகநாதன்; பொருள்புதிது யோக ராமர் கோயில், நெடுங்குணம், திருவண்ணாமலை மாவட்டம் இணையத்தில் இருந்து. அம்ருதேஸ்வரர் கோயில், அம்ருதபுரா, சிக்கமகளூர் மாவட்டம், கர்னாடகா. மரங்களின் கீழ் உள்ள பாம்பு பற்றிய கதை: வாலி கிஷ்கிந்தை மலை உச்சியில் இருந்து அபூர்வமான ஏழு பழங்களை பறித்து வந்தான். சிறிது நாள் கழித்ததும் உண்ண எண்ணி அவற்றை ஒரு குகையில் மறைத்து வைத்தான். அந்த குகையில் புகுந்த பாம்பு அந்தப் பழங்களைத் தின்றது. அப்போது பழங்களைச் சாப்பிட வாலி அங்கு வந்தான். பழங்களை பாம்பு சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து கோபம் கொண்ட வாலி பாம்பை மலைக் குகையில் இருந்து வெளியே எறிந்தான். "பாம்பே, நீ எனக்கு தெரியாமல் என் பழங்களை உண்டதால் இந்த காட்டில் முறையில்லாமல் வளைந்து அசையாமல் கிடப்பாய். உன் மேல் ஏழு ஆச்சா மரங்கள் பெரிதாக வளரும். உன்னை ...