ராமர் ஏழு மரா மரங்களைத் துளைத்தது
![]() |
| இலக்குவனும், சுக்கிரீவனும் பார்த்திருக்க ராமன் ஏழு மரா மரங்களை ஒற்றை அம்பால் துளைத்தல். சின்னையன் குளம், சின்னியம்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் |
கம்ப ராமாயணத்தின் அடிப்படையில் இந்த காட்சியை சிறப்பாக விளக்குகிறது இந்தக் கட்டுரை:
மராமரப் படலம்; திரு சு சண்முகநாதன்; பொருள்புதிது
![]() |
| யோக ராமர் கோயில், நெடுங்குணம், திருவண்ணாமலை மாவட்டம் |
![]() |
| இணையத்தில் இருந்து. அம்ருதேஸ்வரர் கோயில், அம்ருதபுரா, சிக்கமகளூர் மாவட்டம், கர்னாடகா. |
மரங்களின் கீழ் உள்ள பாம்பு பற்றிய கதை:
வாலி கிஷ்கிந்தை மலை உச்சியில் இருந்து அபூர்வமான ஏழு பழங்களை பறித்து வந்தான். சிறிது நாள் கழித்ததும் உண்ண எண்ணி அவற்றை ஒரு குகையில் மறைத்து வைத்தான். அந்த குகையில் புகுந்த பாம்பு அந்தப் பழங்களைத் தின்றது. அப்போது பழங்களைச் சாப்பிட வாலி அங்கு வந்தான்.பழங்களை பாம்பு சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து கோபம் கொண்ட வாலி பாம்பை மலைக் குகையில் இருந்து வெளியே எறிந்தான். "பாம்பே, நீ எனக்கு தெரியாமல் என் பழங்களை உண்டதால் இந்த காட்டில் முறையில்லாமல் வளைந்து அசையாமல் கிடப்பாய். உன் மேல் ஏழு ஆச்சா மரங்கள் பெரிதாக வளரும். உன்னை அடையாளம் கண்டு, அந்த ஏழு ஆச்சா மரங்களையும் ஒருவன் ஒரே பாணத்தில் வீழ்த்தும்போது உனக்குச் சாப விமோசனம் கிடைக்கும்." என்றான். சாபம் பெற்ற சர்ப்பம் நிலத்தில் வளைந்து அமைந்தது. அதன் மேல் ஏழு ஆச்சா மரங்கள் வளர்ந்தன.
இராமனும் சுக்ரீவனும் சந்திக்கின்றனர். ஒருவருக்கொருவர் உதவ முன்வருகின்றனர். அப்போது சுக்ரீவன் இராமனிடம் வாலியின் வலிமையை விளக்குகிறான். "இராமா, வாலியிடம் தேவலோகத்தில் இருந்து பெற்ற தங்க மாலை ஒன்று உள்ளது. அது அவன் கழுத்தில் உள்ள வரை அவனை யாராலும் வீழ்த்த முடியாது. ஏனென்றால், அவன் அதனை அணிந்து யுத்தம் செய்யும் போது எதிரியின் பலத்தில் பாதி அவனுக்குப் போய்விடும். எனவே இராமா உன்னால் வாலியை நேர் நின்று வெல்ல முடியாது. ஆனால் இந்தக் காட்டில் இருக்கும் ஏழு ஆச்சா மரங்களை நீ ஒரே பாணத்தில் வீழ்த்தினால் வாலியை வெல்வாய் என் நம்பிக்கை கோள்வேன்" என்கிறான் சுக்ரீவன்.
இராமன் அந்த ஏழு ஆச்சா மரங்களைப் பார்க்கிறான். அவை நிலத்தின் மீது அமைந்திருக்கும் முறையை கவனித்த ராமன், ஒரு பாம்பின் மேல் மரங்கள் வளர்ந்திருப்பதைத் தெரிந்து கொண்டான். தன் அருகில் இருக்கும் தம்பி இலட்சுமணனின் பாதத்தைத் தன் கட்டை விரலால் அழுத்தினான். ஆதிசேடனின் கூறான ஆன இலட்சுமணன் அந்த சர்ப்பத்தை நேராக்கினான். ஏழு மரங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்தன. இராமன் அவற்றை ஒரே பாணத்தில் வீழ்த்தினான். பாம்பு சாப விமோசனம் பெற்றது.
இராமன் அந்த ஏழு ஆச்சா மரங்களைப் பார்க்கிறான். அவை நிலத்தின் மீது அமைந்திருக்கும் முறையை கவனித்த ராமன், ஒரு பாம்பின் மேல் மரங்கள் வளர்ந்திருப்பதைத் தெரிந்து கொண்டான். தன் அருகில் இருக்கும் தம்பி இலட்சுமணனின் பாதத்தைத் தன் கட்டை விரலால் அழுத்தினான். ஆதிசேடனின் கூறான ஆன இலட்சுமணன் அந்த சர்ப்பத்தை நேராக்கினான். ஏழு மரங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்தன. இராமன் அவற்றை ஒரே பாணத்தில் வீழ்த்தினான். பாம்பு சாப விமோசனம் பெற்றது.
சாப விமோசனம் கிடைத்த நாகம் இராமனை வணங்கி நின்றது. "வீரனே எனக்கு விமோசனம் அளித்தாய். பதிலுக்கு நான் உனக்கு என்ன கைம்மாறு செய்ய வேண்டும்" எனக் கேட்டது. இராமன், "அரவமே, நீ கிஷ்கிந்தைப் போய் வாலியின் கழுத்தில் உள்ள தங்கமாலையை அவன் நித்திரையில் இருக்கும் போது எடுத்து வந்து என்னிடம் கொடு" என்றான். நாகமும் அவ்வாறே செய்தது. வாலியும் சுக்ரீவனும் சண்டையிட்ட போது இராமன் மறைந்திருந்து வாலியை வீழ்த்தினான்.
(தமிழ் விக்கி; ஏழு ஆச்சா மரங்களை வீழ்த்திய கதை (இராமாயண நாட்டார் கதை) மூலம்: இராமன் எத்தனை இராமனடி ! அ.கா. பெருமாள், காலச்சுவடு வெளியீடு)



Comments
Post a Comment