திருமாலின் 24 வடிவங்கள்

மகாபாரதத்தின் அனுசாசனப் பர்வத்தில் உள்ள விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் திருமாலின் 1000 பெயர்கள் உள்ளன. அவற்றுள் 24 பெயர்கள் மிக முக்கியமானவை ஆகவும் தினசரி வழிபாட்டில் இடம்பெறக் கூடியவை ஆகவும் கருதப்படுகின்றன. 

இந்த 24 பெயர்களுக்கான திருமாலின் 24 உருவங்கள் வரையறுக்கப் பட்டுள்ளன. திருமாலின் 4 கைகளில் ஆழி (C), சங்கு, கதை, தாமரை ஆகியவை அமையும் விதம் இந்த பெயர்களை நிர்ணயிக்கின்றன. மற்றபடி திருமாலின் வடிவில் இந்த 24 வடிவங்களுக்குள் வேறுபாடு இல்லை.

24 (சதுர் விம்ஷதி) திருமால் உருவங்கள்
(ரூபமண்டனம் நூலின் படி)
BR
வலது பின் கை
C
சக்கரம்
BL
இடது பின் கை
S
சங்கு
FL
இடது முன் கை
G
கதை
FR
வலது முன் கை
P
தாமரை
வஎ
ரூபமண்டன வரிசை எண்
BRBLFLFRவஎ
C
S
GPஜனார்தனன்21
PGமாதவன்3
G
SPஸ்ரீதரர்9
PSவாமனர்8
P
SGஹ்ருஷிகேசன்10
GSஹரி23
S
C
GPகேசவன்1
PGவாசுதேவன்14
G
CPதாமோதரன்12
PCப்ரத்யும்னன்15
P
CGசங்கர்ஷ்ணன்13
GCமதுசூதனன்6
G
C
SPத்ரிவிக்ரமன்7
PSஉபேந்திரன்22
S
CPஅதோக்ஷஜன்18
PCஅனிருத்தன்16
P
SCகோவிந்தன்4
CSஸ்ரீ கிருஷ்ணன்24
P
C
GSபத்மநாபன்11
SGஅச்சுதன்20
S
CGவிஷ்ணு5
GCபுருஷோத்தமன்17
G
CSநாராயணன்2
SCநரசிம்மன்19

பத்ம புராணத்தின் பாதாள காண்டமும் இதே வரிசையை அளிக்கிறது. அதில் ஆயுதங்களின் அமைப்பில் ரூப மண்டனத்தின் அமைப்பில் இருந்து சில வேறுபாடுகள் உள்ளன. 

கேசவன் (SCGP)*

1 கேசவன் (SCGP)
San Francisco Asian Art Museum in USA

நாராயணன் (PGCS)

2 நாராயணர் (PGCS) துணைவி லக்ஷ்மியுடன்

மாதவன் (CSPG)

கோவிந்தன் (GPSC)

விஷ்ணு (PSCG)

மதுசூதனன் (SPGC)

திரிவிக்ரமன் (GCSP)

8 வாமனர் (CGPS)

9 ஸ்ரீதரர் (CGSP)*

10 ஹ்ருஷிகேசன் (CPSG)*

11 பத்மநாபன் (PCGS)

12 தாமோதரன் (SGCP)

13 சங்கர்ஷ்ணர் (SPCG)*

14 வாசுதேவன்(SCPG)*

15 பிரத்யும்னன் SGPC

16 அனிருத்தன் (GSPC)

17 புருஷோத்தமன் (PSGC)

18 அதோக்ஷஜன்(GSCP)*

19 நரசிம்மர் (PGSC)

20 அச்சுதன் PCSG*

21 ஜனார்தனன் (CSGP)*

22 உபேந்திரன் GCPS

23 ஹரி CPGS

24 ஸ்ரீ கிருஷ்ணன் (GPCS)

படங்கள்: 
1. * சென்னகேசவர் கோயில், சோமநாதபுரம்
https://commons.wikimedia.org/wiki/Category:Vishnu_at_the_Chennakesava_Temple_at_Somanathapura இல் உள்ள படங்களில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது.
2. மற்றவை லக்ஷ்மி நாராயணர் கோயில், ஹோசஹோலலு, கர்நாடகா
https://commons.wikimedia.org/wiki/Category:Reliefs_and_sculptues_at_the_Lakshminarayana_Temple,_Hosaholalu இல் உள்ள படங்களில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது.

ஆயுதங்களின் குறியீடுகள்
  • சங்கு - ஒலி, பிரபஞ்ச ஒழுங்கு, தெய்வக் குரல்
  • ஆழி - காலம், பிரபஞ்ச விதி, அறியாமையின் அழிவு
  • கதை - வல்லமை, அதிகாரம்
  • தாமரை - தூய்மை, வளமை, அழகு, ஆன்மீக விழிப்பு.
இருபத்து நால்வரின் துணைவியர், தத்துவங்கள்

எண்

பெயர்

துணைவி

தத்துவம்

1

கேசவர்

ஸ்ரீ

ஆகாயம்

2

நாராயணர்

லக்ஷ்மி

காற்று

3

மாதவர்

கமலா

நெருப்பு

4

கோவிந்தர்

பத்மா

நீர்

5

விஷ்ணு

பத்மினி

நிலம்

6

மதுசூதனர்

கமலாலயா

ஓசை

7

திரிவிக்ரமர்

ரமா

தொடுகை

8

வாமனர்

வ்ரிஷகபி

பார்வை

9

ஸ்ரீதரர்

தன்யா

சுவை

10

ஹ்ருஷிகேசர்

விருத்தி

மணம்

11

பத்மநாபர்

யஜ்னா

பேச்சு

12

தாமோதரர்

இந்திரா

கை

13

சங்கர்ஷ்ணர்

ஹிரண்யா

கால்

14

வாசுதேவர்

ஹரிணி

குதம்

15

பிரத்யும்னர்

சத்யா

பாலுறுப்பு

16

அனிருத்தர்

நித்யா

காது

17

புருஷோத்தமர்

நந்தா

தோல்

18

அதோக்ஷஜர்

திரேயா

கண் 

19

நரசிம்மர்

சுகா

நாக்கு

20

அச்சுதர்

சுகந்தா

மூக்கு

21

ஜனார்த்தனர்

சுந்தரி

மனம்

22

உபேந்திரர்

வித்யா

அறிவு

23

ஹரி

சுசீலா

அகங்காரம் 

24

ஸ்ரீகிருஷ்ணர்

சுலக்ஷணா

சித்

https://en.wikipedia.org/wiki/Chaturvimshatimurti#cite_ref-:0_3-1

மேற்கண்ட 24 தத்துவங்கள் 5 பருப்பொருட்கள் (1-5), 5 தன்மாத்திரைகள் (6-10), 5 கர்ம இந்திரியங்கள் (11-15), 5 ஞான இந்திரியங்கள் (16-20), மனம், புத்தி, அகங்காரம், சித் ஆகியவை சாங்கிய தரிசனத்தின் 24 தத்துவங்களே ஆகும். சாங்கியத்தின் ஆதி இயற்கை, மஹத் ஆகியவற்றிற்கு பதிலாக சித், அறிவு உள்ளன.

24 வடிவங்கள் உருவாகி வந்த அடிப்படை

பாஞ்சராத்திரா ஆகம லக்ஷ்மி தந்திரம், அஹிர்புத்யான சம்ஹிதா மற்றும் பிருஹத் பிரம்ம சம்ஹிதா ஆகிய்வை 24 திருமால் வடிவங்கள் உருவான அடிப்படையை விளக்குகின்றன. 

பரநிலை  

பர வாசுதேவர் பர நிலையில் உள்ள அனைத்துமான உச்ச தெய்வமாக திருமால். அவர் ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் ஆகிய 6 குணங்கள் உடையவர். குற்றமற்றவர்.

வியூக நிலை

பர வாசுதேவரில் இருந்து அடுத்த நிலையான 4 வியூக நிலை தெய்வங்கள் கீழ்கண்டவாறு வெளிப்படுகின்றன.
  • பர வாசுதேவரில் இருந்து வ்யூக நிலை வாசுதேவர்
  • வ்யூக நிலை வாசுதேவரில் இருந்து சங்கர்ஷணர்.
  • சங்கர்ஷணனில் இருந்து பிரத்யும்னர்.
  • ப்ரத்யும்னனில் இருந்து அனிருத்தர்.
வாசுதேவர் பர வாசுதேவரின் 6 குணங்களையும் கொண்டிருக்க, மற்ற மூவர் இரு இரு குணங்கள் மட்டும் கொண்டுள்ளனர். சங்கர்ஷனர் - ஞானம், பலம். ப்ரத்யும்னன் - ஐஸ்வர்யம், வீர்யம். அனிருத்தன் - சக்தி, தேஜஸ்.

வியூக நால்வரின் திசைநோக்கு
  • வாசுதேவர் - கிழக்கு 
  • சங்கர்ஷனர் - தெற்கு
  • பிரத்யும்னர் = மேற்கு 
  • அனிருத்தர் - வடக்கு 
24 திருமால் வடிவங்கள்

முதலில்

நான்கு வ்யூக நிலை தெய்வங்கள் ஒவ்வொருவரில் இருந்தும் மூன்று திருமால் வடிவங்கள் கீழ்கண்டவாறு தோன்றுகின்றன.
  • வாசுதேவரில் இருந்து -  கேசவர் (1), நாராயணர் (2), மாதவர் (3).
  • சங்கர்ஷனரில் இருந்து - கோவிந்தர் (4), விஷ்ணு (5), மதுசூதனர் (6)
  • பிரத்யும்னரில் இருந்து - த்ரிவிக்ரமன்(7), வாமனன் (8), ஸ்ரீதரன் (9)
  • அனிருத்தரில் இருந்து - ஹிருஷிகேசர் (10), பத்மநாபர் (11), தாமோதரன் (12).
24 திருமால் வடிவங்களுள் மேற்கண்ட 12 (துவாதச) வடிவங்கள் முதன்மையானவையாக கருதப்படுகின்றன. அவை வியூஹாந்தர அல்லது உபவ்யூஹ வடிவங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

அடுத்து 
  • நான்கு வியூக தெய்வங்களில் இருந்து அதே பெயர் கொண்ட அம்சங்கள் தோன்றுகின்றன, வாசுதேவர் (14), சங்கர்ஷனர் (13), பிரத்யும்னன் (15), அனிருத்தன் (16).
அடுத்து
  • 24 வடிவ வாசுதேவரில் இருந்து (வ்யூக வாசுதேவரில் இருந்து அல்ல) புருஷோத்தமர் (17), சங்கர்ஷணரில் இருந்து அதோக்ஷஜர் (18), பிரத்யும்னரில் இருந்து நரசிம்மர் (19), அனிருத்தரில் இருந்து அச்சுதர் (20) ஆகிய நால்வர் தோன்றினர்.
அடுத்து
  • புருஷோத்தமரில் இருந்து மற்ற நால்வர் தோன்றினர் - ஜனார்த்தனர் (21), உபேந்திரர் (22), ஹரி (23),  ஸ்ரீகிருஷ்ணர் (24) 

சக்திகள்

நாரத பஞ்சராத்ர ஆகமத்தில் மூன்றாவது ராத்திரியில் 24 திருமால் வடிவங்களுள் 14 வடிவங்களுக்கு அவர்களது சக்தியின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அனைவருக்குமான வேறு பட்டியல்களும் உள்ளன.

பன்னிரு நாமங்கள்

வைணவர்கள் தங்கள் உடலில் கீழ்க்கண்டவாறு பன்னிரு இடங்களில் நாமத்தை தரிக்கின்றனர்.

இந்த பன்னிரு இடங்களும் 24 திருமால் வடிவங்களில் முக்கியமான முதல் 12 வடிவங்களோடு இணைக்கப்பட்டுள்ளது 

(படம் நன்றி: https://gyanopadesam.wordpress.com/2017/02/15/significance-of-thiruman-srichurnam/)

உடலில் நாமங்களை வரிசைப்படி தரிக்கும் போது இந்த முதல் 12 நாமங்களை வரிசைப்படி ஓத வேண்டும். எடுத்துக்காட்டு முதல் நாமத்தை தரிக்கும்போது கேசவா இரண்டாவது நாமத்தை தரிக்கும்போது நாராயணா.........

துணை

T.A. Gopinatha Rao; Elements of Hindu Iconography; Vol 1, Part 1; pages 227-244




Comments

Popular posts from this blog

ஏகபாத மூர்த்தி

முருகன் ஊர்தியான மயிலின் வகைகள்