அண்டரண்டப் பறவை
கண்டரண்ட பக்ஷி - இது ஒரு பேருருக் கொண்ட பக்ஷியெனக் கதைகளில் கூறியிருக்கின்றனர். நம்ப இடமில்லை. - அபிதான சிந்தாமணி அண்டரண்டப் பட்சி; நெடுங்குணம் யோக ராமர் கோயில் தமிழில் அண்டரண்டப் பறவை. கன்னடத்தில் கண்டபேருண்டப் பறவை. இது ஒரு கற்பனையான புராணப் பறவை. மேற்கண்ட படத்தில் மனித உருவமும் இரண்டு கழுகுத் தலைகளும் இரு இறக்கைகளும் கொண்டுள்ளது. திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில். பல யானைகளை அடக்கித் தூக்கி கொண்டு பறக்கக் கூடிய வலிமை உடையதாக சித்திரிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு சோமேசுவரர் கோயில் நந்தி மண்டபத் தூண் சிற்பம் மனித உருவம், இரண்டு கழுகுத் தலைகள், இரு இறக்கைகள் இரு கால்களின் கீழ் இரு யானைகள், இரு கைகளில் இரு யானைகள், இரு அலகுகளில் இரு யானைகள் என ஆறு யானைகளை வெல்லும் ஆற்றலையும் பேருருவத்தையும் சித்தரிக்கும் சிற்பம். ராமேசுவரர் கோயில், கேளடி, சிவமொக்கா மாவட்டம், கர்நாடகா (படம் நன்றி: Dineshkannambadi at the English-language Wikipedia, CC BY-SA 3.0 <http://creativecommons.org/licenses/by-sa/3.0/>, via Wikimedia Commons) கேளடி, கேளடி நாயக்கர்களின் தலைநகரமாக இருந்த ஊர். மேல் ப...