முக லிங்கம்

சிவ லிங்கம் சிவ முகம் கொண்டிருந்தால் அந்த லிங்கம் முக லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. சிவலிங்கம் சிவனின் அருவ வடிவத்தைக் குறித்தால், முக லிங்கம் அவனது அருவுருவ வடிவைக் குறிக்கிறது.


அவை மூவகை:
  1. சஹஸ்ர லிங்கம் (ஆட்யம்) - 1008 லிங்கங்களை கொண்டது.
  2. சுரேட்யம் - 108 லிங்கங்களை கொண்டது.
  3. சர்வசமம் - ஒன்று முதல் ஐந்து முகங்கள் கொண்டது.
அண்ணாமலையார் ஆலயத்தில் இரண்டாம் திருச்சுற்றில் வடமேற்கு பாகத்தில் உள்ள சகஸ்ர லிங்கம்.

நன்றி: சக்தி விகடன் https://www.vikatan.com/spiritual/temples/84199-
அண்ணாமலையார் ஆலயத்தில்  உள்ள சகஸ்ர லிங்கம்.


நன்றி: சக்தி விகடன் https://www.vikatan.com/spiritual/temples/84199-

சர்வசமம்
  • ஒரு முகம் - ஏக முக லிங்கம்.
  • இரு முகங்கள் - துவி முக லிங்கம்.
  • மூன்று முகங்கள் - திரி முக லிங்கம்.
  • நான்கு முகங்கள் - சதுர் முக லிங்கம்.
  • ஐந்து முகங்கள் - பஞ்ச முக லிங்கம்.

சிவனுக்கு ஐந்து திசைகளில் ஐந்து முகங்கள் உண்டு. அவை சிவனின் ஐந்து தொழில்களை குறிப்பவை.

1. மேற்கு - சத்யோஜாதம் - படைத்தல் - நிலம் - வெண்மை
2. வடக்கு - வாமதேவம் - காத்தல் - நீர் - சிகப்பு
3. தெற்கு - அகோரம் - அழித்தல் - நெருப்பு - கறுப்பு
4. கிழக்கு -  தத்புருஷம் - மறைத்தல் - காற்று - மஞ்சள்
5. வடகிழக்கு - ஈசானம் - அருளல் - வானம் - படிக நிறம்

ஏக முக லிங்கம் 

அண்ணாமலையார் ஆலயத்தில் இரண்டாம் திருச்சுற்றில் தென்மேற்குப் பகுதியில் ஒரு ஏகமுக லிங்கம் உள்ளது.

நன்றி: சக்தி விகடன்: https://www.vikatan.com/spiritual/temples/84199-

சிதம்பரம் நடராஜர் கோயிலிலும் ரகசியத்தின் அருகில் ஒரு முக லிங்கம் உள்ளது.

துவிமுக லிங்கம்

துவிமுக லிங்கம் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

திரி முக லிங்கம்

விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை சந்திரமௌலீசுவரர் ஆலயத்தில் திருமுக லிங்கம் மூலவராக உள்ளது. கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளில் முகங்கள் அமைந்தது.

மும்முக லிங்கம்,திருவக்கரை
நன்றி: தினமலர்

சதுர்முக லிங்கம்

அண்ணாமலையார் கோயிலில் பிரம்ம தீர்த்தத்தின் மேற்கே பிரம்மலிங்க தனிச் சந்நிதி உள்ளது. அதிலுள்ள சதுர் முக லிங்கம்.

சதுர்முக 'பிரம்ம' லிங்கம் - அண்ணாமலையார் கோயில்

கிழக்கு நோக்கிய சந்நிதியில் கிழக்கு தத்புருஷ முகத்தை வாயில் வழியாக தரிசிக்கலாம். மற்ற மூன்று முகங்களையும் அந்ததந்த திசைகளில் அமைந்துள்ள சாளரங்கள் வழியாக தரிசிக்கலாம்.

இது போன்ற பிரம்ம லிங்கங்கள் திருவானைக்காவல், காஞ்சி கச்சபேசுவரர் (நடராஜர் சந்நிதிக்கு அருகில்) ஆலயங்களிலும் உள்ளன.

பஞ்சமுக லிங்கம் 

வேலூர் விரிஞ்சிபுரத்தில் வழித்துணைநாதர் ஆலயத்தில் நடுத் திருச்சுற்றின் வடக்குப் பகுதியில் உள்ள மண்டபத்தில் இந்த பஞ்சமுக லிங்கம் உள்ளது.

பஞ்சமுக லிங்கம் - விரிஞ்சிபுரம் வழித்துணை நாதர்





நன்றிக் கடன் 

விக்கிப்பீடியா

சக்தி விகடன் - https://www.vikatan.com/spiritual/temples/84199-


The earliest Mukhalinga is an inscribed panchamukha linga from Bhita (Prayagraj), now in the State Museum, Lucknow (2nd century BCE). Another unique linga from the same period is in the Parasurameswara Temple at Gudimallam (Andhra). The Gudimallam linga, in worship even now, has an image of a male figure carved over its shaft. This male figure, in the appearance of a hunter, represents Shiva, shown holding an axe and a ram and standing over a dwarf demon.

The iconography of Mukhalingas started taking shape during the Kushan period in northwest India and was soon crystalised during the Gupta period as we find many Mukhalingas installed in temples and shrines. While many Gupta-period Shivalingas are now adorning various museums and collections, two magnificent Shivalingas are still in their original shrines, one at the Udayagiri Cave and another in the Shiva Temple at Bhumara, both in Madhya Pradesh.

The Udayagiri caves near Vidisha (MP) are famous for some of the earliest Hindu iconographic representations. These caves were excavated during the reign of the Gupta king Chandragupta II (380-415 CE). Cave number 4 has an ekamukha linga enshrined inside. The face is round with the hair tied above in a knot and falling on the sides, making a frame around the face. Shiva’s third eye is placed vertically between his eyebrows. He is shown sporting a smile with his eyes half-closed. As the Mukhalinga faces east, it may represent the Tatpurusha aspect of Sadashiva.

The iconography advanced with time, resulting in new dimensions and transformations. The Chaumukhnath Temple, Nachna in Panna district (MP) is famous for its Chaturmukha linga (8th century CE). Inside the temple is a 5-ft-high linga with four faces carved on its shaft, which represent the Tatpurusha, Aghora, Vamadeva and Sadyojata aspects of Sadashiva. The aspect of Ishana is conceived as a notional fifth head assumed over the top of the Shivalinga. The face of Aghora is very elaborately carved, reflecting this terrific aspect with an open mouth, contracted brows and protruding teeth. Placing flowers, incense, and other offerings in the open mount of the Aghora face is a general practice of the devotees in the temple.

Saurabh Saxena
Founder of Puratattva, a documentation of heritage sites 
(Puratattva.India@gmail.com)

https://www.newindianexpress.com/opinions/columns/2021/Aug/09/shivalinga-movement-of-formless-to-form-2342066.html


Comments

Popular posts from this blog

ஏகபாத மூர்த்தி

திருமாலின் 24 வடிவங்கள்

முருகன் ஊர்தியான மயிலின் வகைகள்