இந்திராணி (சசி), பாரிஜாத அபஹரணம், நகுஷன் கதை
இந்திராணி என்ற பெயரில் இரு பெண் தெய்வங்கள் உண்டு. ஒருவர் இந்திரனின் மனைவி சசி, மற்றொருவர் ஏழு கன்னியருள் ஒருவர். இந்தப் பதிவு முதல்வரைப் பற்றியது. வேதங்களிலேயே இடம் பெறும் இந்திராணி தன் கணவராலேயே அறியப்படுபவர். தனித்த வழிபாடு இல்லாதவர். இவரை மையமாகக் கொண்டு சில புராணக் கதைகள் உண்டு. பெயர்கள் சசி - இதை இவர் இயற்பெயராகக் கொள்ளலாம். பேச்சு என்று பொருள். இந்திராணி, ஐந்திரி, மகேந்திரி, சக்ராணி - இந்திரன் மனைவி என்று பொருள். மகேந்திரன், சக்ரன் ஆகியவை இந்திரனின் பெயர்கள். பௌலோமி, புலோமஜா - புலோமன் என்ற அசுரனின் மகள். புலோமன் கஸ்யப முனிவருக்கும் அவர் மனைவி தனுவுக்கும் பிறந்த மகன். சாருதாரா - அழகி தேவராணி - தேவர்களின் அரசி குழந்தைகள் இந்திரன், சசி தேவிக்கு ஜெயந்தன், ரிஷபன், மிதுஷன் ஆகிய மகன்களும் ஜெயந்தி, தேவசேனா ஆகிய மகள்களும் இருந்தனர். தேவசேனா முருகனையும் ஜெயந்தி சுக்கிராச்சாரியரையும் மணந்தனர். புராணக் கதைகள் ராஜா ரவிவர்மாவின் 'மேகநாதனின் வெற்றி' மேற்கண்ட ஒவியம் மைசூரு ஜகன்மோஹன் அரண்மனையின் ஸ்ரீ ஜயசாம ராஜேந்திர கலைக்கூடத்தில் உள்ள ராஜா ரவிவர்மாவின் 16 ஓவியங்களுள் ஒன்று. ராவணின் மகன...