வில்லேந்திய வேலவர்


(படம் நன்றி: அர்ஜுன வல்லபா)
  • பூம்புகார் அருகில் உள்ள பாடல் பெற்ற தலமான சாயாவனம் சாயவனேசுவரர் கோயிலில் முருகர் கையில் வில் மற்றும் அம்பு ஏந்திய கோலத்தில் நான்கு கைகளுடன் செப்புப் படிமமாக காட்சி தருகிறார்.
  • ஆகமங்களின்படி முருகர் ஆறுமுகராக பன்னிரண்டு கைகளோடு விளங்கும்போதும் எட்டு கைகளை கொண்டிருக்கும் போதும் இடக்கை ஒன்றில் வில்லும் வலக்கை ஒன்றில் அம்பும் இருக்கலாம். ஆனால் இரண்டு, நான்கு, ஆறு கைகள் உடைய முருகர் படிமங்களில் வில்லையும் அம்பையும் ஆகமங்கள் பரிந்துரைப்பதில்லை. இங்கு நான்கு கை முருகர் வில் அம்பை ஏந்தி இருப்பது சிறப்பு.
  • இவர் திருச்செந்தூர் கோயிலைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது. 1648-ஆம் ஆண்டில், டச்சுக்காரர்கள் இந்தச் சிலையைத் திருட்டுத்தனமாகக் கப்பலில் கொண்டு சென்றனர். அவர்களது கப்பல் கடலின் நடுவில் சிக்கிக்கொண்டதால், அவர்கள் பூம்புகார் அருகே முருகன் சிலையைக் கடலில் தவறவிட்டனர். பின் இந்த முருகர் சிலை பூம்புகார் கடற்கரையில் ஒரு மீனவரின் வலையில் சிக்கியது. கடலில் இருந்து கிடைத்ததால் இவரை "கடல் கொடுத்த சுடர்" என்றும் அழைக்கிறார்கள்.
  • சிலையின் அடியில் "செந்தில் ஆண்டவர்" என்று பொறிக்கப்பட்டுள்ளது. 
  • அவரது காலில் 'வீரகண்டமணி' என்ற தண்டையை அணிந்திருக்கிறார். சிவனால் அளிக்கப்பட்டது.
  • வில் ஏந்திய நிலையில் இடது காலை முன்வைத்து, போருக்குச் செல்லும் வீரத் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். "சத்ரு சம்ஹார மூர்த்தி" என்று அழைக்கப்படுகிறார்.
  • சத்ரு சம்ஹார மூர்த்தியாக இருப்பதால், எதிரிகள் தொல்லை நீங்கவும், வழக்குகளில் வெற்றி பெறவும் இவருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
  • செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபடுவது உண்டு.
முருகர் வில்லுடன் உள்ள மற்ற சில தலங்கள்
  • மயிலாடுதுறை மாவட்டம் திருவிடைக்கழி  இங்கு முருகர் இடது கைகளில் வில்லும் வைரமும், வலது கையில் சக்தியும், வேலும் கொண்டு காட்சி தருகிறார். செப்புச் சிற்பம்
(படம் நன்றி: srinu22vasu via insta)
  • தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோயில் முருகன் சன்னதியில் தனுசு சுப்பிரமணியராக வில், அம்பு மற்றும் வேல் ஏந்தி நான்கு கைகளுடன், ஒரு முகத்துடன் அருள் பாலிக்கிறார்.
  • வில்லுடையான்பட்டு முருகன் கோயில் (கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப்) - இங்கு முருகன் கையில் வில் அம்புடன் காட்சி தருகிறார். அருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தலம் 'அத்திப்பட்டு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயில் முருகர் செப்புச் சிற்பம்.
படம் நன்றி: kamal archives via insta)

ஆவுடையார் கோயில் தூண் சிற்பம்

Comments

Popular posts from this blog

ஏகபாத மூர்த்தி

முருகன் ஊர்தியான மயிலின் வகைகள்

திருமாலின் 24 வடிவங்கள்