அனுமன்

அனுமனும் காசிலிங்கமும்


ராவணனைக் கொன்ற அந்தணக்கொலைப் பழி நீங்க ராமேஸ்வரத்தில் ஒரு லிங்கத்தை நிறுவி வழிபட வேண்டும் என்று ராமனுக்கு முனிவர்கள் அறிவுரை வழங்கினர். ராமன் காசியில் இருந்து ஒரு லிங்கத்தைக் கொண்டு வருமாறு அனுமனை அனுப்பிவைத்தார். ஆனால் உரிய நேரத்தில் அனுமன் வராததால் சீதை மணலால் செய்த லிங்கத்தை நிறுவினார் ராமன். காசியில் இருந்து லிங்கத்தோடு வந்த அனுமன் அந்த மணல் லிங்கத்தை அகற்றி காசி லிங்கத்தை நிறுவ முயற்சித்து தோல்வியுற்றான். ராமேஸ்வரம் கோயில் வாயிலிலுள்ள சிவந்த நிற அனுமனின் உருவம் இந்நிகழ்வை நினைவு கூறுகிறது. அனுமனை அமைதிப்படுத்த ராமன் சீதை அமைத்த லிங்கத்திற்கு வடக்காக அனுமன் கொண்டுவந்த லிங்கத்தை நிறுவினார். அதுவே அனுமலிங்கம் அல்லது காசிலிங்கம் என்ற பெயருடன் விளங்குகின்றது. முதலில் இந்த விசுவநாதருக்கு வழிபாடு நடத்தப்பட்டபின்பே, சீதையால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்கு நடைபெறும் என்று ராமர் அறிவித்தார்.





Comments

Popular posts from this blog

ஏகபாத மூர்த்தி

திருமாலின் 24 வடிவங்கள்

முருகன் ஊர்தியான மயிலின் வகைகள்