லஜ்ஜா கௌரி
நான் லஜ்ஜா கௌரியின் சிற்பத்தைப் பார்த்தது கர்நாடக மாநிலம் பாதாமியில் உள்ள அருங்காட்சியகத்தில். 29/10/2019 அன்று. முன் கூடத்தின் பின்னால் உள்ள அறையில் இருந்தது சிற்பம். அருங்காட்சியகத்தில் உள்ள காட்சிப்பொருட்களில் முதன்மையானது இது.
![]() |
| லஜ்ஜா கௌரி: பாதாமி அருங்காட்சியகம் |
இந்த சிற்பம் பாதாமியில் இருந்து 8 கிமீ தொலைவிலுள்ள நாகநாதனகொள்ள என்ற இடத்தில் கிடைத்தது.
- கிடைக்கப்பெற்றுள்ள லஜ்ஜா கௌரி சிற்பங்களுள் சிறந்ததாகவும் முழுமையானதாகவும் கருதப்படுவது இது.
- நிர்வாணமாய் திரண்ட முலைகளுடன் கால்களை மடக்கி விரித்து யோனியைக் காட்டியவாறு உள்ள சிற்பம்.
- தலைக்குப் பதிலாக தாமரை.
- இரு கரங்களிலும் தாமரை மலர்கள். மலர்களின் தண்டுகள் கைகளைச் சுற்றியுள்ளன.
- மலர்களை ஏந்தியுள்ள முறை - சுட்டு விரல், நடு விரல்கள் ஒரு புறமும் கட்டை விரல் மறுபுறமும் அமைந்து தண்டைப் பற்றியவாறு - ஆகம முறை கை (ஹஸ்தம்) அமைப்புகளிலிருந்து வேறுபட்டது.
- அழகான கீழ் வயிற்று மடிப்பு
- அணிகள் - சரப்பளி (Necklace), கைகளிலும் கால்களிலும் இரு இரு வளைகள், தோள் வளைகள், சன்ன வீரம், மேகலை (இடை அணி).
- தொடைகளைச் சுற்றி அவற்றின் நடுவே 5-6 மடிப்புகளைக் கொண்ட ஒரு துணி உள்ளது.
- சன்ன வீரம் எனும் வீரச் சங்கிலி வீரர்களின் அணியாகும். இது கழுத்தின் இரு பக்கங்களிலும் இருந்து மறுபுற இடைக்குச் சென்று முதுகிலும் அவ்வாறே அமைவது. முன்னும் பின்னும் உடலின் குறுக்கே X போன்று விளங்குவது. முன்பகுதியில் இரு சங்கிலிகளும் ஒன்றை ஒன்று குறுக்கிட்டுச் செல்லுமிடத்தில் முடிச்சும் அதில் இருந்து பதக்கத் தொங்கலும் காணப்படும். வீரனாகிய முருகனுக்கு உகந்தது. ஆற்றலின் வடிவமாகிய சக்தி படிமங்களிலும் இது அமையும் (சிற்பச் செந்நூல்; கணபதி ஸ்தபதி)
இந்த சிற்பத்தின் ஒரு அழகிய ஓவியம் கீழே உள்ளது. மேற்கண்ட கூறுகளைத் இதில் தெளிவாகக் காணலாம்.
![]() |
| பாதாமை அருங்காட்சியக லஜ்ஜா கௌரி: ஓவியம் Source: The Shakthi Sadhana Group |
இதே போன்ற ஒரு லஜ்ஜா கௌரி சிற்பம் பாதாமி அருகே உள்ள ஐஹொளே இல் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள சித்தனகொள்ள என்ற ஊரில் ஒரு பாறையில் செதுக்கப்பட்டுள்ளது.
![]() |
| லஜ்ஜா கௌரி: சித்தனக்கொள்ள, கர்நாடகா Source: @varunika saraf, Instagram post |
இந்த தாய் தெய்வத்தின் வழிபடு இந்தியாவின் நடுப்பகுதியில் கிபி முதல் 1000 ஆண்டுகள் செழித்திருந்து பின் மங்கியது. வைதீக இந்து மாதத்தில் இந்த தெய்வம் இணையவில்லை. புராணங்கள் ஆகமங்கள் ஆகியவற்றில் இந்த தெய்வம் குறிப்பிடப்படவில்லை. இதனால் இவரது சரியான பெயர், வழிபாடு, புராணம் போன்ற தகவல்கள் கிடைக்கவில்லை. ஆராய்ச்சியாளர்களின் ஊகங்களேஉள்ளன.
இது போன்ற லஜ்ஜா கௌரி சிற்பங்கள் ஆலம்பூர் (தெலுங்கானா), மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கிடைத்துள்ளன. 100 க்கும் மேற்பட்ட கல், சுடுமண் சிற்பங்கள் கிடைத்துள்ளன.
சங்கமேசுவரர் கோயில் சாளுக்கிய மன்னன் முதலாம் புலிகேசியால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. (6 ஆம் நூற்றாண்டு) கிருஷ்ணா, துங்கபத்திரை ஆறுகளின் கூடும் சங்கமத்தின் அருகில் இருந்த குடவெல்லி என்ற கிராமத்தில் அமைந்திருந்தது. அதுவே பெயர் காரணம். இந்த சங்கமத்தின் அருகில் ஸ்ரீசைலம் அணைகட்டப்பட்டபோது இந்த கோயில் நீரில் மூழ்குவதில் இருந்து இந்த கோயிலைக் காப்பாற்ற ASI இதை இடம் பெயர்த்து ஆலம்பூர் அருகில் நிறுவியது.
![]() |
| கூடவெல்லி கிராம சங்கமேசுவரர் கோயிலில் இருந்த லஜ்ஜா கௌரி சிற்பம்; தற்போது ஆலம்பூர் அருங்காட்சியகத்தில் உள்ளது. |
சென்னை, அலஹாபாத், நியூயார்க், லண்டன் அருங்காட்சியகங்களிலும் இவ்வகைச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
| லஜ்ஜா கௌரி; அமராவதியில் கண்டெடுக்கப்பட்டது தற்போது சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. |
| சுடுமண் லஜ்ஜா கௌரி; சுங்கர் காலம்; கிபி முதல் நூற்றாண்டு; அலகாபாத்தில் கிடைத்தது. அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ளது. |
| லஜ்ஜா கௌரி; சுடுமண் சிற்பம்; பிரிட்டிஷ் அருங்காட்சியகம் |
| லஜ்ஜா கௌரி; மன்சர் பிரவர்பூர் கிபி 5 ஆம் நூற்றாண்டு. |
| லஜ்ஜா கவுரி; கர்நாடக மாநிலம் மகாகூடம் பாதாமி சாளுக்கியர் காலம் |
| லஜ்ஜா கௌரி; சுண்ணாம்புக் கல்; ஒடிசா மாநிலம் நுவாபாடா மாவட்டம் |
| காமாக்யா கோயில்; குவாஹதி, அசாம் |
நன்றிக்கடன்
https://www.academia.edu/5246382/Lajja_Gauri_the_goddess_of_sexuality_from_Mesopotamia_to_India Max Le Martin, Lajja Gauri, the goddess of sexuality, from Mesopotamia to India, Part of the Amazon book






Comments
Post a Comment