ஆயுத புருஷர்கள்
தெய்வங்களின் ஆயுதங்களை தெய்வங்களின் உயிருள்ள அடியார்களாக, இறையம்சம் கொண்டவர்களாகக் கருதுவது மரபு. அவர்களுக்குப் பெயர்கள் உண்டு. அவர்களில் சிலர் வழிபாட்டுக்கு உரிய துணை தெய்வங்களாகவும் கோயில்களில் அமைகின்றனர்.
திருமால்
திருமாலின் ஆயுதங்கள் ஐந்து.
ஆழி (சக்கரம்) - சுதர்சனர்
சங்கு - பாஞ்சஜன்யம்
வில் - சார்ங்கம்
தண்டு (கதை) - கௌமோதகி
வாள் - நந்தகம்
சாரங்கபாணி (பாணி - ஏந்தியவன்), சக்ரபாணி என இவர்களைக் கொண்டு திருமால் அறியபடுகிறான்.
இந்த ஐவரும் திருமாலின் ஆயுதங்களாக அமைவது மட்டுமின்றி அவரோடு எப்போதும் உடனிருந்து காவல் பணியும் செய்வர். ஊழி முடிவில் பெருமாள் யோக நித்திரையில் பள்ளி கொண்டிருக்கும் போதும் உறங்காது காவல் காப்பர். திருமெய்யம் குடைவரையை உள்ள அவ்வாறு உறங்கும் பெருமாள் அமைந்த சிற்பத்தொகுதியில் அவரை தாக்க வரும் அசுரர்கள் மது, கைடபர்களை எதிர்த்துத் தாக்கும் ஐந்து ஆயுத புருஷர்களுடைய உருவங்கள் பிரம்மாவின் இருபுறமும் அமைந்துள்ளன.
திருமெய்யம் குடைவரை [பள்ளிகொண்டபெருமாள் சிற்பத்தில் ஆயுத புருஷர்கள் ஐவர்
பாதாமி சாளுக்கியர் கோயில்களில் விஷ்ணுவின் சிற்பத்தில் கதை கௌமோதகி என்ற பெண்ணுருவமாக காட்டப்படுகிறது. தலையின் உச்சியில் கதை போன்ற முடி இருப்பது அடையாளம். இது குப்த மாளவபாணி எனப்படுகிறது..
பாதாமி மாலகெட்டி சிவாலய தேவகோட்டத்தில் விஷ்ணு.
அவரது வலதுபுறம் கட கௌமோதகி,
படம்: நன்றியுடன்:https://www.talkativeman.com/malegitti-shivalaya-temple-badami/
12 ஆழ்வார்களில் ஐவரான பொய்கை ஆழ்வார், பூதத் ஆழ்வார், பேய் ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோர் முறையே பாஞ்சஜன்யம், கௌமோதகி, நந்தகம், சுதர்சனர், சார்ங்கம் ஆகிய ஆயுத புருஷர்களின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்பது வைணவர்களின் நம்பிக்கை.
சக்கரத்தாழ்வார்
இந்த ஐவருள்ளும் ஆழியாகிய சுதர்சனர் தனிச் சிறப்பு பெற்றவர். அவருக்கு சக்கரத்தாழ்வார் என்று ஆழ்வார் பட்டமும் உண்டு. பெருமாள் கோயில்களில் தனிச் சந்நிதி பெற்றவர்.
சிவன்
சிவனின் ஆயுதங்களும் ஐந்து.
- திரிசூலம் - சூலதேவர்
- மழு - மழுவடியார்
- வில் - பினாகம்
- வாள் - சந்திரஹாசம்
- கட்வங்கம்
சூலதேவரும் மழுவடியாரும்
இவற்றுள் திரிசூலம் 'சூலதேவர்' ஆகவும், மழு 'மழுவடியார்' ஆகவும் வாயிற்காவலர்களாக சிவன் கோயில்களில் பல்லவர் காலத்தில் காட்டப்பட்டுள்ளனர்.
சந்திரஹாசம்
இராமாயணம் சிவபெருமானின் வாளின் பெயர் சந்திரஹாசம் என்கிறது. இராவணனின் தவத்தினால் சிவபெருமானினடமிருந்து சந்திரஹாச வாளைப் பெறுகிறான். ஒருமுறை மட்டுமே பயன்படுத்த இயலும் என்ற நிபந்தனையுடன். சீதையை கவர்ந்து செல்கையில் அவனை தடுக்கும் ஜடாயுவை இந்த வாளால் வெட்டுகிறான். இராவணனை விட்டு சிவபெருமானிடம் சந்திரஹாசம் மீளவும் சென்றுவிட்டது.
சார்ங்கமும் சாரங்கமும்
சார்ங்கம் என்ற சொல் திருமாலின் வில்லுக்குரிய சிறப்புப்பெயர். 'சார்ங்கம் மால்வில்' எனச் சூடாமணி நிகண்டும், 'சார்ங்கம் விண்டுவில்' என நாமதீப நிகண்டும் தெளிவாக்குகின்றன. பாணி என்பது கரத்தில் ஏந்தியவன் எனப் பொருள் தரும். எனவே சார்ங்கபாணி என்பதற்குச் சார்ங்கம் என்னும் தெய்வீக வில்லை ஏந்தியவன் என்பது பொருள். சாரங்கம் என்பது பல பொருள்களை உடைய ஒரு சொல். 'சாரங்கம் மானும் வண்டும் சாதகப் புள்ளும் ஆமே' என்பது சூடாமணி. சாரங்கபாணி என்றால் மானை ஏந்திய சிவபெருமான் எனக் கொள்ளலாம்.
'சார்ங்கம் உதைத்த சர மழை போல்' - திருப்பாவை
சார்ங்கம் என்ற சொல் திருமாலின் வில்லுக்குரிய சிறப்புப்பெயர். 'சார்ங்கம் மால்வில்' எனச் சூடாமணி நிகண்டும், 'சார்ங்கம் விண்டுவில்' என நாமதீப நிகண்டும் தெளிவாக்குகின்றன. பாணி என்பது கரத்தில் ஏந்தியவன் எனப் பொருள் தரும். எனவே சார்ங்கபாணி என்பதற்குச் சார்ங்கம் என்னும் தெய்வீக வில்லை ஏந்தியவன் என்பது பொருள். சாரங்கம் என்பது பல பொருள்களை உடைய ஒரு சொல். 'சாரங்கம் மானும் வண்டும் சாதகப் புள்ளும் ஆமே' என்பது சூடாமணி. சாரங்கபாணி என்றால் மானை ஏந்திய சிவபெருமான் எனக் கொள்ளலாம்.
'சார்ங்கம் உதைத்த சர மழை போல்' - திருப்பாவை
இரண்டு சொற்களிலும் முதலில் வரும் 'சா' ஒன்றல்ல. தேவநகரியில்
சா(शा)ர்ங்கம் - திருமாலின் வில். சா(सा)ரங்கம் - மான் முதலியன. தமிழில் श, स, இரண்டையும் 'ச' என்றே எழுதுகிறோம். கிரந்தத்தில் श - ஶ, स - ஸ.
சிவன் கை மானை பொதுவாக 'ம்ருக' என்பர். மானுக்கான வடமொழிச் சொல். சிவன் 'ம்ருகபாணி'. "ஓம் ம்ருகபாணயே நமஹ" என்பது சிவனின் 108 திருப்பெயர் வரிசையில் 33 வது.
துணை


Comments
Post a Comment