திருமாலின் ஐந்து நிலைகள்

திருமால் ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கிறார்.

1. பர நிலை -
அ. வைகுண்டத்தில் முக்தி அடைந்த ஜீவாத்மாக்களுக்கு காட்சி தந்தருளும் பரவாசுதேவ நிலை.
ஆ. தேவர்களுக்கு அருள்புரியும் பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள நிலை.

2. வியூஹ நிலை - 

3. விபவ நிலை - ராமர், கண்ணன் போன்ற அவதார நிலை

4. அந்தர்யாமி நிலை - பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்களுக்குள்ளும், பொருள்களுக்குள்ளும் உள்ளுறைந்திருக்கும் நிலை

5. அர்ச்சை நிலை - உயிர்களுக்கு அருள்புரிய காட்சி தரும் திருமேனி நிலை.



அர்ச்சை நிலை

திருமால் அருள் பாலிக்கும் அர்ச்சை வடிவம் நான்கு விதங்களில் நிறுவப்படும்.

1. மானுஷம் - அரசர் முதலிய மனிதர்களால் நிறுவப்படும் திருமேனிகள்

2. ஆர்ஷம் - முனிவர்களால் நிறுவப்படும் திருமேனிகள்

3. தைவிகம் - பிரம்மா முதலிய தெய்வங்களாலும், இந்திரன் முதலிய தேவர்களாலும் நிறுவப்படும் திருமேனிகள்

4. ஸ்வயம் வியக்தம் - தானே தோன்றிய திருமேனிகள்


ஸ்வயம் வியக்தம் (தான் தோன்றி)

சைவத்தில் தானாகவே வெளிப்பட்ட லிங்கங்களை 'சுயம்பு' லிங்கங்கள் என்று அழைப்பார்கள். அவ்வாறு வைணவத்தில் தானாகவே தோன்றிய திருமாலின் திருவுருவங்களை 'ஸ்வயம் வியக்தம்' என்பர். அவ்வாறு தொன்றிய இடங்களை 'ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்கள்' எனப்படும். அத்தகைய ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்கள் எட்டு:
  1. திருவேங்கடம்
  2. திருவரங்கம்
  3. ஸ்ரீமுஷ்ணம்
  4. நாங்குநேரி
  5. புஷ்கரம் (ராஜஸ்தான்)
  6. நைமிசாரண்யம் (உத்திர பிரதேசம்)
  7. பத்ரிநாத் (உத்திராகண்ட்)
  8. முக்திநாத் (நேபாளம்)

துணை

ஆன்மிகம் வலைத்தளம்; திருமாலின் ஐந்து நிலைகள்

Comments

Popular posts from this blog

ஏகபாத மூர்த்தி

திருமாலின் 24 வடிவங்கள்

முருகன் ஊர்தியான மயிலின் வகைகள்