சூலக் கல்
கோயில் நிலங்களை குறிக்கும் வகையில் நிறுவப்பட்ட எல்லைக் கற்கள்
சூலக்கல்
இது சிவன் கோயிலுக்கு தானம் கொடுக்கப்பட்ட நிலத்தின் எல்லைகளைக் குறிக்க நாட்டப்பட்டது. இதில் காணப்படும் சூலக்குறி சிவனை சூல தேவராக வழிபட்ட நிலையையும் குறிக்கிறது. போருக்குச் செல்லும் முன் சூல தேவரை வழிபட்டு செல்வது ஒரு வழக்கமாக இருந்திருக்கிறது.
சிவனின் திருமுடியில் காட்டப்பட்டுள்ள சந்திரன் இங்கும் பிறை சந்திரனாக காட்டப்பட்டுள்ளார். சூரியன் கானப்படவில்லை. இருவரும் பொறிக்கப்படுவது வழக்கம்.
அடியில் காணப்படும் பன்றி சிவனின் அடியைத் தேடிச் சென்ற விஷ்ணுவின் வராக அவதாரத்தை குறிப்பதாக இருக்கலாம். விஜயநகர காலத்தில் பன்றிச் சின்னத்தை அவர்களுடைய அரச குறியீடாக குறித்து அதன் முன் சிறு குறுவாளை குறிப்பிடுவர்.
விழுப்புரம் மாவட்டம், பனைமலை ஏரியில் இருந்து கிழக்குக் கால்வாய் வழியே நீர் வெளியேறும் பகுதியில் உள்ள பிரம்மாண்டமான சூலக் கல். அதை வழிபட்டு ஏரி நீரினை வரவேற்கும் அப்பகுதி விவசாயிகள்!
(நன்றி: விழுப்புரம் கோ செங்குட்டுவன்)



Comments
Post a Comment