ததிவாமனர் அன்னமூர்த்தி
![]() |
| ததிவாமனர் லட்சுமி நாராயணர் கோயில், ஹோசஹொலலு |
திருமாலின் அவதாரமான வாமனருக்கு தயிரும் தயிர் சாதமும் மிகவும் பிடித்தமானவை என்று நம்பிக்கை. அதன் அடிப்படையில் அமைந்த வாமனருடைய உருவமே ததிவாமனர்.
ஹோசஹோலலு நகரம் ஹாசனுக்கு தென்கிழக்கே 60 கிலோமீட்டர் (37 மைல்) தொலைவில் உள்ளது. அங்குள்ள லட்சுமி நாராயணர் கோயில் ஹொய்சாள மன்னன் வீர சோமேஸ்வரனால் 13 ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது. இது ஒரு திருகூட விமானம் - மூன்று கருவரைகளை உடையது.
ததிவாமனர் வலது பின் கையில் சங்கு, இடது பின் கையில் சக்கரம்.
வலது முன்கையில் தயிர் சாதம் (ததியன்னம்) நிறைந்த தங்கப் பாத்திரம்.
இடது முன்கையில் தங்க நீர்க் குடுவை.

Comments
Post a Comment