காத்தாயி அம்மன், காத்யாயினி

சென்னையில் ஒரு மருத்துவமனையின் வரவேற்பு அறையில் வைக்கப்பட்டிருந்த சிற்பம் இது. நாகப்படத்துடன் இடது ஒக்கலில் ஒரு கைக்குழந்தையுடன் ஆன இறை உருவத்தை அதற்கு முன் பார்த்ததில்லை. அங்கிருந்தவர்களிடம் விசாரித்த அறிந்துகொண்டேன் அது காத்யாயனி அம்மன் சிற்பம் என்று. காத்தாயி அம்மன் என்றும் வழிபடப்படும் தெய்வம்.

காத்தாயி என்ற காத்யாயனி அம்மன்

காத்தாயி ஒரு நாட்டார் தெய்வம். இப்பெயரில் நாகப்படமும் குழந்தையும் இல்லாத உருவங்களும் உண்டு. தனியாகவும் மற்ற பெண் தெய்வங்கள், ஏழு முனிகள், பச்சையம்மன் உடனான ஆறு கன்னியர் போன்ற தெய்வங்களுடன் அமைவதும் உண்டு. 

இத் தெய்வத்தைப் பற்றி ஒவ்வொரு தலத்திற்கும் வெவ்வேறாக பல தொன்மங்கள் உள்ளதை இணையத் தேடல் காட்டுகிறது.

Comments

Popular posts from this blog

ஏகபாத மூர்த்தி

திருமாலின் 24 வடிவங்கள்

முருகன் ஊர்தியான மயிலின் வகைகள்