தழுவக் குழைந்த நாதர்
சிவன் கைலாயத்தில் அமர்ந்து பார்வதியோடு உரையாடிக் கொண்டிருந்தார்.அப்போது சிவன் பார்வதியிடம், " சூரியனும் சந்திரனும் எனது இரு கண்களாக உலகுகளுக்கு ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன" என்றார். பார்வதி அதைச் சோதிக்க எண்ணி விளையாட்டாக சிவன் கண்களைத் தன் கைகளால் மூடினார். அண்டங்கள் இருண்டன. தேவர்கள் முதல் சிற்றுயிர்கள் வரை அனைத்து உயிர்களும் அல்லலுற்றன. தன் தவறுணர்ந்த பார்வதி உடனே தன் கைகளை விலக்கிக் கொண்டார். கைலாயத்தில் கண நேரம் என்பது இவ்வுலகில் பல்லாண்டுகள் ஆகும். சிவன் பார்வதியை பிழையீடாக தவம் செய்யச் சொன்னார்.
பார்வதி பத்ரிகாஸ்ரமத்தில் கார்த்யாயன முனிவரின் பெண்ணாக அவதரித்தாள். கார்த்யாயினி என்று பெயர் கொண்டாள். தன் பெண்ணின் அவதார நோக்கத்தை அறிந்த முனிவர் அவள் தகுந்த பருவம் அடைந்ததும் தவம் செய்ய தென் திசைக்கு அனுப்பி வைத்தார். வேகவதி நதிக்கரையில் காஞ்சியை வந்தடைந்ததும் தான் தவம் இயற்ற வேண்டிய இடம் இதுவே என்று உணர்ந்த அன்னை மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபட்டு தவம் செய்யலானாள்.
| தவம் செய்யும் பார்வதி படம்: Elements of Hindu Iconography Vol 2 Part 2 T.A. Gopinatha Rao; 1914 |
சிவன் வேகவதி நதியில் பெருவெள்ளம் பெருகச் செய்து திருவிளையாடினான். அன்னை மணல் லிங்கத்தை காப்பதற்காக அதை இறுக அணைத்துக் கொண்டாள். அவள் முலைகளும் வளைகளும் லிங்கத்தில் அழுந்தின.
![]() |
| திருச்சத்திமுற்றம் |
"குழையத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கை வல்லி"
- அபிராமி பட்டர்.
"ஆகம் குழைய ஆதரவுடன் தழுவு நாயகி"
- அருணகிரிநாதர்
‘‘திணி இருள் அறுக்கும் சோதித் திருவுருக்குழைந்து காட்டி
அணிவளைத் தழும்பினோடு முலைச்சுவடணிந்தார் ஐயர்"
- காஞ்சி புராணம்
![]() |
| காவேரிப்பாக்கம் அபய வரதர் கோயில் |
அணிவளைத் தழும்பினோடு முலைச்சுவடணிந்தார் ஐயர்"
- காஞ்சி புராணம்
![]() |
| வழுவூர், வந்தவாசி அருகில் படம் நன்றி: https://varalatrupayanangal.blogspot.com/2021/04/85.html |
லிங்கமாகிய சிவன் குழைந்து மென்மையாகி அவள் தழுவலை ஏற்றுக் கொண்டான். 'தழுவக் குழைந்த தலைவன்' ஆனான். நான்மறைகளை நான்கு கிளைகளாகக் கொண்ட மாமரத்தின் கீழ் காட்சி அளித்து அன்னையின் தவத்தை ஏற்றுக் கொண்டான். அதனால் ஏகம்பன் எனப் பெயர் பெற்றான் (ஏக ஆம்ரம் = ஒரு மா).
மற்ற தலங்கள்
காஞ்சியைத் தவிர பல தலங்களிலும் இதே போன்ற புராணம் தல புராணமாக உள்ளது. அதில் முக்கியமானது பட்டீஸ்வரம் அருகிலுள்ள திருச்சத்திமுற்றம் அத்தகைய ஒரு தலம். அவ்வூர் சிவாலய இறைவன் சிவக்கொழுந்தீஸ்வரர் அல்லது தழுவக் குழைந்த நாதர் என்று அழைக்கப்படுகிறார்.
தழுவக் குழைந்தீஸ்வரர் கோயில், படப்பை, காஞ்சிபுரம் அருகிலும் உள்ளது.
துணை
படங்கள் நன்றி: TMVAS வாட்ஸ் அப் குழுமம்




Comments
Post a Comment