சித்தர்கள்: மீன நாதரும் சீடர்களும்

மீனநாதர்
யோகதண்டம், யோகபட்டத்துடன் மகரத்தின் மேல். வலதுகை தண்ட ஹஸ்தம்
நம்பிராய பெருமாள் கோயில், திருக்குறுங்குடி 
நன்றி:wisdomlib.org

  • இவர் மீனநாதர், மத்ஸ்யேந்திர நாதர், மத்ஸ்யேந்திரர், மச்சீந்திரர், மீனபா என்ற பெயர்கள் கொண்ட சித்தர். 
  • இந்தியா, நேபாளம், திபெத் ஆகிய நாடுகளில் பரவியிருந்த நாத பரம்பரை என்னும் சித்தர் பரம்பரையின் துவக்கமாய் இருந்தவர். 
  • சிவனிடம் இருந்து உபதேசம் பெற்றவர்.  
  • கௌல சைவத்தோடு தொடர்புடையவர். 
  • பௌத்தர்கள் இவரை அவலோகிதீசுவரரின் அவதாரமாக மதிக்கின்றனர். 
  • கோரக்கரின் குரு.

புராணம்

மீனநாதரது காலம் வெவ்வேறு குறிப்புகளின்படி 7 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டுக்குள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டிருக்கிறது. பிறந்த இடம் காமரூபம் எனப்படும் இன்றைய அசாம் அல்லது வடக்கு வங்காளம் என்று கருதப்படுகிறது.

இவரது பிறப்பு, வாழ்க்கை பற்றி பல்வேறு மாறுபட்ட தகவல்கள் கிடைகின்றன.

  • மீனநாதர் ஒரு கேடுதரும் நட்சத்திரத்தில் பிறந்ததாக அஞ்சிய அவரது பெற்றோர் அவரை கடலில் வீசிவிட்டனர். அவரை உண்ட ஒரு மீன் கடலின் ஆழத்திற்குச் சென்றது. அங்கு சிவன் பார்வதிக்கு யோக மறைபொருள்களை உபதேசித்துக் கொண்டிருந்தார். அதை மீனின் வயிற்றில் இருந்தவாறே கேட்டுத் தெளிந்த மீனநாதர் யோக சாதனைகளை மீனின் வயிற்றுக்குள்ளேயே செய்யத் தொடங்கினார். 12 ஆண்டுகளுக்குப் பின் யோகத்தில் முழுமை அடைந்து சித்தராக மீனின் வயிற்றில் இருந்து வெளிவந்தார். 
  • மீனநாதர் மீனாகப் பிறந்து சிவ பார்வதி யோக உபதேசத்தை முழுமையாக கேட்டறிந்தார் என்றும் மகிழ்ந்த சிவன் அவரை சித்தராக்கினார்.
  • முருகர் கௌல சைவ ஆகமங்களை கடலில் தூக்கி எறிந்துவிட்டார். ஒரு மீன் அவற்றை விழுங்கிவிட்டது. 12 ஆண்டுகள் அந்த மீனின் வயிற்றில் அவை இருந்தன. பைரவர் நீந்திச் சென்று அவற்றை மீட்டார். அப்போது அந்த மீனின் வயிற்றில் இருந்து அந்த ஆகமங்களை உள்ள்ணர்ந்தவராக மீனநாதர் மீனின் வயிற்றில் இருந்து பிறந்தார். 

மீனநாதர் ஹட யோக, தந்திர நூல்களை இயற்றினார்.

அவரது சீடர்கள் கோரக்கர் உட்பட எண்மர். அவர்கள் மூலம் நாத பரம்பரை என்னும் சித்தர் பரம்பரை தொடங்கியது. மீனநாதர் மற்றும் எட்டு சீடர்களை நவநாதர்கள் எனக் குறிப்பிடுவர்.

நவநாதர்கள் சிற்பங்கள் தமிழகம் உட்பட தென்னிந்தியாவில் விஜயநகர கால கோயில் கட்டுமானங்களில் தூண் மற்றும் சுவர் சிற்பங்களாகக் கிடைக்கின்றன. நவநாதர் சிற்பங்களில் அவர்களது வாகனங்கள் அமைந்து அவர்களை அடையாளம் காண உதவுகின்றன.

கோரக்கர்

புலி வாகனத்தில் கோரக்கர்
திருக்கழுக்குன்றம்

கோரக்நாத், கோரக்ஸ்நாத் எனவும் அறியப்படுபவர். மீனநாதரின் முக்கிய சீடர். மீனநாதர் ஆன்மீக வாழ்க்கையில் இருந்து வழிதவறி லௌகீகத்தில் மூழ்கியபோது அவரை மீட்டெடுத்தார் எனப்படுகிறது. நாத மடங்களை உருவாக்கிய நாத பரம்பரையின் பேராளுமை. ஆன்ம விடுதலைக்கு யோக வழியை முன்னிறுத்தியவர். இவரது காலம் 12-15 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தமிழகத்தின் 18 முக்கியமான சித்தர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். அத்வைதி. யோக சித்தாந்த, ஹட யோக நூல்களை யாத்தவர்.

மீனநாதர், கோரக்கர் (புலி மீது), சௌரங்கி நாதர் (மான் மீது)
ஸ்ரீசைலம்

ஸ்ரீசைலம்
மீனநாதர், புலித்தோல் மீது கோரக்கர், மேலும் இரு சித்தர்கள்

பைரவநாதர்

விருச்சிகம் மீது மகராஜலீலாசனத்தில் பைரவநாதர்
ஜலகண்டேசுவரர் கோயில், கலாசிபாளயம், பெங்களூரு

சௌரங்கிநாதர்
சௌரங்கிநாதர் மான் மீது
மான் கொம்பை ஊதி சிங்கநாதம் செய்தவாறு
ஜலகண்டேசுவரர் கோயில், கலாசிபாளயம், பெங்களூரு

கூர்மநாதர்

கூர்மநாதர் ஆமை மீது மகராஜ லீலாசனத்தில்
திருக்காமேசுவரர் கோயில், வில்லியனூர்

நாகநாதர்

நாகநாதர்
திருக்காமேசுவரர் கோயில், வில்லியனூர்

வராகநாதர்

வராகநாதர் யோகநிலையில்
ஸ்ரீரங்கம்

வியாழநாதர்
வியாழம் மீது வியாழநாதர்
ஜலகண்டேசுவரர் கோயில், கலாசிபாளையம், பெங்களூரு

மற்ற சித்தர் சிற்பங்கள் 

சிம்மம் மீது அமர்ந்த நாத சித்தர்

சிம்மம் மீது அமர்ந்த நாத சித்தர்
ஜலகண்டேசுவரர் கோயில், கலாசிபாளையம்

ரிஷபம் மீது சித்தர்
சுதைச் சிற்பம், திருவீழிமலை

மீனநாதர் சிற்பங்கள் சில

திருவண்ணாமலை அண்ணாமலையார் அம்மன் ஆலயம்
மகராஜ லீலாசனத்தில் யோகபட்டத்துடன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் அம்மன் ஆலயம்

சுகாசனத்தில்
போகநந்தீஸ்வரர் கோயில், சிக்கபல்லபூர், கர்நாடகா

மகராஜ லீலாசனத்தில்
தஞ்சை பெரிய கோயில்


ஜலகண்டேஸ்வரர் கோயில், கலாசிபாளையம், பெங்களூரு

வீணையுடன் லளிதாசனத்தில்
பட்டீஸ்வரர் கோயில், பட்டீஸ்வரம், கும்பகோணம்

உத்குகுடிகாசனத்தில் வலது கையில் 
பட்டீஸ்வரர் கோயில், பட்டீஸ்வரம், கும்பகோணம்

சுதை சிற்பம் மகராஜ லீலாசனம்
திருவீழிமலை

உத்குடிகாசனம்
திருக்காமேசுவரர் கோயில், வில்லியனூர்

தி
வீணையுடன்
திருக்காமேசுவரர் கோயில், வில்லியனூர்

மேல் அகோபிலம்

லெபாக்ஷி

பெங்களூரு ஹளசூரு சோமனாதர் கோயிலில் ஒன்பது பேரும் ஓரே வரிசையில் அமைந்துள்ளனர் (16-17 ஆம் நூற்றாண்டு).


துணை

படங்கள்: https://www.wisdomlib.org/gallery/siddha-cult-in-tamilnadu. அதன் மூலம்: “Siddha Cult in Tamilnadu: Its History and Historical Continuity” by R. Ezhilraman 

https://mydattatreya.com/matsyendranath/

https://en.wikipedia.org/wiki/Matsyendranatha

https://en.wikipedia.org/wiki/Gorakhnath#Historian_accounts



Comments

Popular posts from this blog

ஏகபாத மூர்த்தி

திருமாலின் 24 வடிவங்கள்

முருகன் ஊர்தியான மயிலின் வகைகள்