ஐயனார்
ஐயனார் ஒரு கிராம காவல் தெய்வம். பொதுவாக நீர்நிலைகள் பக்கத்தில் கூறையற்ற கோயில் கொள்பவர். இப்போது சில இடங்களில் கட்டுமான கோயில்களும் உருவாக்கி வருகின்றன. திருவண்ணாமலை துர்க்கையம்மன் கோயில் தெருவில் உள்ள ஐயனார் ஆலயம்:
![]() |
| ஐயனார் கோயில் |
ஐயனார் இரு மனைவியருடன். புஷ்கலா தேவி தேவலோகப் பெண். பூரணி பூலோகத்துப் பெண். முருகரைப் போல.
![]() |
| ஐயனார் - பூரணி, புஷ்கலா தேவியுடன் |
ஐயனார் பெருந்தெய்வங்களுக்கும் கிராமச் சிறு தெய்வங்களுக்கும் இடைப்பட்ட ஒரு தெய்வம்.
தோற்றம்
சிவனுக்கும் மோகினி வடிவெடுத்த விஷ்ணுவிற்கும் பிறந்தவர். திருமால் மோகினி வடிவெடுத்த தருணங்கள் பல.
- பாற்கடலை கடைந்தபோது கிடைத்த அமுதத்தை பங்கு கேட்ட அசுரர்களை ஏமாற்றி அதை தேவர்களுக்கு அளிக்க.
- பஸ்மாசுரன் தனக்கு வரமளித்த சிவன் மீதே வரத்தை சோதனை செய்ய முயற்சித்தபோது சிவனைக் காப்பாற்ற.
- முதற் கடவுளர் மூவரை விட யாக சக்தியை பெரிதாய் எண்ணிய தாருகாவனத்து முனிவர்கள் செருக்கடக்க சிவன் பிட்சாடனராய் முனிபத்தினிகளை நிலையழித்தபோது உடன் முனிவர்களின் நிலையழிக்க.
மோகினிமீது மையல் கொண்டு சிவன் அவளோடு கூடி ஐயனார் பிறந்தார். பிறந்த நாள் மாசி மாத சிவராத்திரி.
சபரிமலை ஐயப்பன், சாஸ்தா ஆகியோர் அய்யனாரின் வடிவங்கள். ஐயப்பன் பிரமச்சாரி. அவர் பால சாஸ்தா (குழந்தை ஐயனார்).
ஐயனார் மற்ற காவல் தெய்வங்களைப் போல ஊன், மது ஏற்பவரல்ல. சைவ உணவு கொள்பவர்.
அவரது பரிவார தெய்வங்களாக அமையும் கிராம தெய்வங்கள் ஊன் பலி கொள்பவை.
அய்யனாரது வாகனங்கள் யானை, குதிரை. யானையை வாகனமாகக் கொண்ட மற்றவர் இந்திரனும், முருகனும்.
ஐயனார் தூண் சிற்பங்கள் கோயில்களில் காணப்படும்.
![]() |
| திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உருத்திராட்ச மண்டபம் தூண் சிற்பம் மகராஜ லீலாசனத்தில் அமர்ந்தவாறு |
![]() |
| திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளைகாப்பு மண்டபம் தூண் சிற்பம் உத்குடிகாசனம் |
முதல் சிற்பத்தில் தலை அலங்காரம் ஜடாபாரம். இடது காலை குத்திட்டு வைத்து அதன் மீது இடது கையை வைத்து (தண்ட ஹஸ்தம்), வலது காலை மடித்து ஆசனத்தின் மீது வைத்திருக்கிறார். வலது கை காக்கும் குறிப்பு காட்டுகிறது.
இரண்டாம் சிற்பத்தில் தலை அலங்காரம் ஜடா மண்டலம். இடது காலை குத்திட்டு வைத்து அதன் மீது இடது கையை தண்ட ஹஸ்தமாய் வைத்து, வலது காலை தொங்கவிட்டுள்ளார் (உத்குடிகாசனம்). வலது கையில் மழு.
நன்றிக்கடன்




Comments
Post a Comment