பரமபத நாதன்
இவர் வைகுண்ட நாராயணன், ஆதி மூர்த்தி என்றும் அழைக்கப்படுபவர்.
வைணவ திவ்ய தேசங்கள் 108 அவற்றுள் இரண்டு மேல் உலகில் இருப்பவை - வைகுண்டமும்,பாற்கடலும். வைகுண்டத்தில் முக்தி அடைந்த ஜீவாத்மாக்களுக்கு காட்சி தந்தருளும் திருமாலின் நிலை பரவாசுதேவ நிலை அல்லது பர நிலை எனப்படும். இது திருமாலின் ஐந்து நிலைகளுள் முதலாவது. மற்றவர்கள் காண முடியாத இந்த நிலையை தாங்கள் வழிபட மானுடர் உருவாக்கிய அர்ச்சை நிலை பரமபதநாதன் உருவம் ஆகும்.
![]() |
| பரமபத நாதன் செஞ்சி பனம்பாக்கம் (படம் நன்றி: விஜய் பட்) |
- ஆதிசேஷனின் முச்சுருள் இருக்கை மேல், அவனது ஐந்து தலை குடை கீழ் வீற்றிருக்கிறார், சேஷனது வால் நுனி கீழ் சுருளின் முன் உள்ளது.
- வலது காலை கீழே தொங்கவிட்டு பத்ம பீடத்தின் மேல் வைத்து, இடது காலை குத்திட்டு இருக்கை மேல் வைத்து, இடது முழங்கால் மீது முன் இடது கையை நீட்டி தண்ட ஹஸ்தமாய் வைத்துள்ள இந்த நிலை உத்குடிகாசனம் எனப்படும்.
- நான்கு கைகளில் பின் இரு கைகள் கர்த்தரி முக ஹஸ்தமாக ஆழியும் சங்கும் தாங்க, வலது முன் கையை இருக்கையின் மீது வைத்துள்ளார் (நித்ரா ஹஸ்தம்)
- மகர பூரிமத்துடன்ன் கூடிய கிரீட மகுடம், மகர குண்டலங்கள், கண்டிகை, சரப்பளி, சவடி, ஆகிய கழுத்தணிகள், வாகு மாலை, மகர பூரிமத்துடன் கூடிய தோள் வளை, கைக்கு மூன்று கை வளைகள், உபவீதமாய் ஸ்தன, உரஸ் சூத்திரங்களோடு கூடிய முப்புரி நூல், உதர பந்தம், சிம்மமுகம் (கீர்த்திமானம்) கொண்ட அரைப்பட்டிகை, குரங்குச் செறி, தண்டை பட்டுடை ஆகிய அணிகளை அணிந்துள்ளார். பட்டுடை, அரைப்பட்டிகையின் முடிச்சு தொங்கல்கள், குரங்குச் செறியின் தொங்கும் மாலைகள், பதக்கங்கள் ஆகியவை ஆதிசேஷனின் சுருள் இருக்கைமேல் அழகாக படிந்துள்ளன.
![]() |
| பரமபத நாதன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் புரவி மண்டபத் தூண் சிற்பம் |
![]() |
| பரமபதநாதன், கருடன் நாமக்கல் (படம் நன்றி: South Indian Images of Gods and Godesses by H Krishna Sastri 1st Ed;1916) |
![]() |
| பாதாமி 3 ஆம் குகை பொ ஆ 578 |
![]() |
| சோமநாதபுரா கேசவர் கோயில், மைசூர் அருகில் (Mashalti, CC BY-SA 3.0 <https://creativecommons.org/licenses/by-sa/3.0>, via Wikimedia Commons) |
நன்றிக்கடன்:
விஜய் பட்
T.A. Gopinatha Rao; Elements of Hindu Iconography, 1st Ed, 1914
H Krishna Sastri; South Indian Images of Gods and Godesses;1st Ed;1916





Comments
Post a Comment