பிருங்கி - முக்கால் முனிவர்

பிருங்கி
ராமேசுவரம்
(நன்றி: @veejaysai)

பிருங்கி சிவனை மட்டுமே வணங்கும் நெறிகொண்ட ஒரு முனிவர். அவர் கைலாயாத்திற்கு செல்கையில் சிவனை மட்டுமே வலம் வந்து வணங்கி பார்வதியை வணங்காது செல்வார். அவரது செய்கையால் சீண்டப்பட்ட அன்னை அடுத்தமுறை அவர் கைலாயம் வந்தபோது சிவனுடன் ஒட்டி அவர் தொடை மீது அமர்ந்திருந்தார். 

(படம் நன்றி @TheGopalan)

பிருங்கி ஒரு வண்டின் வடிவமெடுத்து சிவ பார்வதிக்கு இடையில் இருந்த சிறு இடைவெளியில் சிவனை மட்டும் வலம் வந்து வணங்கித் திரும்பினார்.. 

மீண்டும் இவ்வாறு நிகழாதிருக்கவும், அனைவருக்கும் சிவமும் சக்தியும் இணைந்ததே அனைத்தும் என்று உணர்த்தவும், பார்வதி சிவனின் உடலில் கலக்க விரும்பினாள். அதற்காக சிவனின் அறிவரையின்படி காஞ்சி சென்று தவம் இருந்தாள். அவள் தவத்தை ஏற்ற சிவன் சக்தியை திருவண்ணாமலைக்கு வரவழைத்து அங்கு தனது இடது பாகத்தை ஈந்தார். மாதொருபாகன் (அர்த்தநாரீசுவரர்) ஆனார். 

பிருங்கியின் அடுத்த கைலாய யாத்திரையின்போது சிவன் மாதொருபாகனாக வீற்றிருந்தார்.  அப்போதும் பிருங்கி சிவ சக்தி தத்துவத்தை உணராது பிருங்கி என்ற வண்டின் வடிவெடுத்து அவர்களுக்கிடையில் சிறு துளையிட்டு சிவ பாகத்தை மட்டுமே வலம் வந்தார். சீற்றமுற்ற பார்வதி, "உனக்கு சிவன் மட்டுமே வேண்டும் என்றால் என் கொடையான ரத்தத்தையும் சதையையும் இழப்பாயாக" என தீச்சொல்லிட்டாள். ரத்தமும் சதையும் இழந்து எலும்புக்கூடானார் பிருங்கி. சிவன் தன் முரட்டு பக்தன் மீது இரங்கி அவருக்கு மூன்றாவது காலும் ஒரு தடியும் கொடுத்து உதவினார். 

பிருங்கி
திருவானைக்காவல்
(நன்றி: @veejaysai)

பிருங்கி தன் தவறுணர்ந்து இருவரையும் வணங்கினார்.

பிருங்கி
மயிலை கபாலீசுவரர் ஆலயம்
(நன்றி: @sk_diary1)


 மகிழ்ச்சியில் முக்கால் கூத்தாடினார்.

பிருங்கி
திருப்போரூர்

சிவ நடனம் காணும் பெறு பெற்றவர்களில் பிருங்கியும் ஒருவர். "பிருங்கியின் விழைவுக்கு இசைந்து நடனமாட விருபுவனே" என்று சிவனை சிவானந்த லஹிரியின் 31 ஆம் ஸ்லோகம் முதல் வரியில் சங்கரர் விளிக்கிறார்.

ஐஹோளே ராவனபாடி குகைக்கோயில்
சிவதாண்டவத்தைக் கண்டவாறு இடது மூலையின் மேல் பக்கத்தில் பிருங்கி
(VasuVR, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons)


துணை:

Interesting Facts and Story of Bhringi – The Three Legged Rishi;

படங்கள் நன்றி: https://twitter.com/thegopalan/status/1184326590420766720











Comments

Popular posts from this blog

ஏகபாத மூர்த்தி

திருமாலின் 24 வடிவங்கள்

முருகன் ஊர்தியான மயிலின் வகைகள்