.jpg) |
மோகினியும் தருகாவனத்து ரிஷிகளும் அயோத்தியாபட்டிணம் ராமர் கோயில் பாழடைந்த தேரின் மரச் சிற்பம் | (Balaji Srinivasan, CC BY-SA 2.0 <https://creativecommons.org/licenses/by-sa/2.0>, via Wikimedia Commons |
|
திருமால் பலமுறை மோகினி என்னும் பேரெழில் பெண்ணுருவம் தாங்கியிருக்கிறார்.
- பாற்கடலில் கிடைத்த அமுதத்தை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பகிர்ந்தளிக்க
- தாருகவன முனிவர்களின் செருக்கடக்க பிச்சாண்டவரின் துணையாக
- பஸ்மாசுரனை அழிக்க
- சிவனைக் கூடி ஐயப்பனை பெற
- அரவான் மணமானவனாக பலியாக அவனை மணக்க
ஆயினும், தமிழக ஆலயங்களில் பெரும்பாலும் தாருகவன மோஹினியின் சிற்பங்களே தூண்களில் தனிச் சிற்பங்களகவும், புடைப்பு சிற்பங்களாகவும், கோபுரங்களில் சுதைச் சிற்பங்களாகவும், தேர்களில் மரச் சிற்பங்களாகவும் இடம் பெறுகின்றன.
 |
மோகினியும் தாருகாவனத்து ரிஷிகளும் குடுமியான்மலை (http://picasaweb.google.com/injamaven, CC BY 3.0 <https://creativecommons.org/licenses/by/3.0>, via Wikimedia Commons) |
புராணம்
தாருகவன முனிவர்கள் யாகங்களை விஞ்சிய தெய்வங்கள் இல்லை என்று இறுமாந்து சிவனையும், திருமாலையும் வணங்காமல் இருந்து வந்தனர். அவர்கள் அகந்தையை அழித்து மயக்கத்தை நீக்கி தாங்களே பரம்பொருள் என்று உணர்த்த சிவனும் திருமாலும் எண்ணினர். சிவன் பிச்சாண்டவராக இடது கையில் ஒட்டிய பிரம்ம கபாலம், சூலம், உடுக்கையுடன் பிறந்த மேனியராய்ச் சென்று பிச்சை கேட்டார். பிச்சையிட்ட ரிஷிபத்தினிகள் அவரழகில் மயங்கி, காமத்தால் நிலையழிந்து, உடைகள் நெகிழ்ந்து அவிழ்வதும் அறியாது அவரைப் பின் தொடர்ந்தனர். திருமால் இம்மண்ணறியாப் பேரெழிலுடன் மோகினியாக ஆடையின்றி உடன்வந்தார். அவளைப் பார்த்த கணமே ரிஷிகளும் வேதச்சொல் மறந்து மோகப் பித்தெழுந்து தன்னிலை அழிந்தனர். ஆடைகள் அவிழ்ந்து குறிகள் விரைத்தெழுவதும் அறியாது அவள் பின் செல்லலாயினர்.
 |
| ஏகாம்பரேசுவரர் கோயில், காஞ்சி |
 |
| காமட்சியம்மன் கோயில், காஞ்சி |
 |
திருவாண்டார் கோயில்
|
 |
| திருக்கழுக்குன்றம் |
 |
| ஸ்ரீரங்கம் |
 |
| திருக்கண்ணமங்கை |
 |
| திருமெய்யம் |
 |
| திருவட்டாறு |
 |
| வரதராஜப் பெருமாள் கோயில், காஞ்சி |
 |
வெங்கடேஸ்வரர் கோயில், பெங்களூரு
|
 |
| தெற்கு கோபுரம், வில்லியனூர் |
துணை
விக்கிமீடியா படங்கள் தவிர்த்த மற்ற படங்கள்:
https://www.wisdomlib.org/gallery/siddha-cult-in-tamilnadu. அதன் மூலம்: “Siddha Cult in Tamilnadu: Its History and Historical Continuity” by R. Ezhilraman
Comments
Post a Comment